கனடாவின் ரொரன்டோ-ஸ்காபரோ பகுதியிலுள்ள வீட்டில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 66 வயதுடைய ஒருவர், அவரது மகனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். 32 வயதுயை மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
பிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் மற்றும் மெக்கோவன் சாலைக்கு அருகில் உள்ள விட்லி காசில் கிரசென்ட் வீட்டிற்கு இரவு 11 மணிக்குப் பிறகு கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததாக டொராண்டோ பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் வந்தபோது, வீட்டினுள் காயங்களுடன் 66 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடித்தனர் என்று டொராண்டோ பொலிசார் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர். உயிர்காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்தவர் ரொறன்ரோவைச் சேர்ந்த குலதுங்கம் மதிசூடி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த நபரின் மகன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார் .
மகன் இளங்கோ மதிசூடி (வயது 32) என்பவர் மீது முதல்நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரும் அவரது குடும்பத்தினரும் புதன்கிழமை இரவு வீட்டில் இருந்ததாக அயலவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஆழ்ந்த இரங்கல்களை எம்சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம் .