யாழில் மேளக்காரன் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது.

பிரபல மேள, பீப்பி குழுவான குமரன் குழுவில் மேளம் அடிக்கும் மேளகாரன் விபூஷனன் ஹெரோயின் போதைப் பொருளுடன் யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டான்.

அண்மையில் பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்திற்கு அருகாமையில் காரைநகர் இளம குடும்ப்ப பெண் குலதீீபாவையும் போதைப்பொருள் பழக்கம் உள்ள ஒரு மேளகாரனே உடலுறவு கொண்ட பின் அவளது நகைகளைக் கொள்ளையடித்து அவளைக் கொலை செய்திருந்தான்.

அந்த மேளகாரன் இவனது ஒன்றுவிட்ட தம்பி எனத்தெரியவருகின்றது. இந் நிலையில் தம்மை இசை வேளாளர் என ஒரு சாதிப் பிரிவை உருவாக்கி குலதீபாவை கொன்றவன் மேளகாரன் இல்லை என மேளம் அடிப்பவர்களும் பீப்பி ஊதுபவர்களும் அறிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணுவில் பகுதியை சேர்ந்த இந்த மேளகாரன் யாழ் நகர் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடுவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் குறித்த இவனை கைது செய்து சோதனையிட்ட வேளை அவனது உடைமையில் இருந்து 490 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , குறித்த நபருக்கு போதைப்பொருளை யாழ் . நகர் பகுதியில் வைத்து விற்பனை செய்த நபர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அந்நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad