இந்த மாதம் மார்க்கம் பகுதியில் பல வீடுகளுக்குள் நுழைய முயன்ற ஒருவரை யோர்க் பொலிசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நவம்பர் 18 ஆம் திகதி காலை 7 மணிக்கு முன்பு கென்னடி சாலை மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்குப் பகுதியில் நடந்து கொண்டிருந்த திருட்டு சம்பவம் பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதாக, அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பூட்டப்படாத பக்கவாட்டு கதவு வழியாக ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகவும், வீட்டு உரிமையாளர் “எதிர்த்தபோது” பயந்து ஓடிவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அதே சந்தேக நபர் அப்பகுதியில் குறைந்தது இரண்டு வீடுகளுக்குள் நுழைய முயன்று தோல்வியடைந்ததை புலனாய்வாளர்கள் பின்னர் அறிந்தனர்.
மார்க்கத்தைச் சேர்ந்த 36 வயதான நிஷாந்த் செல்வரத்னம் நவம்பர் 26 அன்று கைது செய்யப்பட்டார்.
அவர் மீது உள்நோக்கத்துடன் திருட்டு, நன்னடத்தை மீறல் மற்றும் இரவில் இரண்டு முறை அத்துமீறல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
