இளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...

எப்போதும் இளமையுடன் இருப்பதற்கு பலருக்கும் ஆசையாக இருக்கும். இருந்தாலும் வயது அதிகரிப்பதை நிறுத்த முடியாது. ஆனால் ஒருவரின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க முடியும். தற்போது மோசமான சுற்றுச்சூழலால் பல இளம் தலைமுறையினரும் முதுமை தோற்றத்துடன் காணப்படுகின்றனர். இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் தான் காரணம். இளமையை பாதுகாக்க வார இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!! எனவே பலரும் கடைகளில் விற்கப்படும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி, சரும அழகை மேன்மேலும் கெடுத்துவிடும். எனவே எப்போதும் இளமையைத் தோற்றத்துடன் காட்சியளிக்க கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தாமல், இயற்கை வழிகளைப் பின்பற்றினால், இளமை தக்க வைக்கப்படுவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இளமையை தக்க வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!!! இங்கு ஒருவரின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும் ஜூஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த ஜூஸ்களில் உங்களுக்கு பிடித்ததை அன்றாடம் குடித்து வந்தாலே, இளமையுடன் காட்சியளிக்கலாம்.

கேரட் ஜூஸ் 
கேரட்டில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. மேலும் கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. எனவே இத்தகைய கேரட்டைக் கொண்டு ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உங்கள் சருமத்தின் இளமை தக்க வைக்கப்படுவதோடு, உங்கள் உடல் எடையையும் குறைக்கலாம்.

பசலைக்கீரை ஜூஸ் 
காலையில் காபிக்கு பதிலாக பசலைக்கீரை ஜூஸ் குடித்து வந்தால், உங்கள் சருமத்தின் இளமை தக்க வைக்கப்படும். எப்படியெனில் பசலைக்கீரையானது ப்ரீ-ராடிக்கல்களின் தாக்குதல்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கும்.

தக்காளி ஜூஸ் 
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், சருமத்தின் இளமை தக்க வைக்கப்படும். எனவே தக்காளி ஜூஸை அன்றாடம் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

வெள்ளரிக்காய் ஜூஸ் 

வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடுவதால், சருமத்தின் அழகு பாதுகாக்கப்படும்.

ப்ராக்கோலி ஜூஸ் 

ப்ராக்கோலியில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இந்த காய்கறியை ஜூஸ் போட்டு அன்றாடம் குடித்து வருவது நல்லது.

முட்டைக்கோஸ் ஜூஸ் 

முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிடுவதே கடினமான விஷமாக இருக்கும் போது, அதனை ஜூஸ் போட்டுக் குடிக்கத் தோன்றாது. இருந்தாலும், இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டுக் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு மேம்படுவதோடு, சரும சுருக்கங்களும் தடுக்கப்படும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad