காதலர் தினம் ~ சில கவிதைகள்...


நீ கேட்டு 
நான் கொடுக்க 
காதல் என்ன 
புத்தகமா? 
பத்திரமாய் ஒருத்தனுக்கு  மட்டுமே
அர்ப்பணிக்கும்
இராண்டம் உயிர்
கேட்டவுடன் கிடைத்திடுமா..?


நீ என்னருகில் இல்லை 
என்பது எவ்வளவு உண்மையோ,
அவ்வளவு உண்மை 
நீ எனக்குள் இருகிறாய் என்பதும்...


உன்னை மட்டுமே நேசித்து
உனக்காக வாழும் சுகம் போதும் 
உன்னை எதிர் பார்த்தே வாழ்ந்திருப்பேன் 
என் வாழ்நாளின் இறுதி வரை 
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...


உன்னை என் இதயம்
 என்று சொல்ல மாட்டேன். 
ஏன் தெரியமா? 
உன்னை துடிக்க விட்டு 
உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை...


ஒவ்வொரு காதலர் தினத்திலும்
நீ தோல்வியையும்
விரக்தியையும் தான்
பரிசாக தந்தாய் எனக்கு...
இந்த காதலர் தினத்தில்
எதை தரபோகின்றாய்
என்ற எதிர்பார்ப்பில்
ரோஜாவோடு நான் இருக்கிறேன்...


தினம் தினம்
சுவாரசியமாக
காதலிக்கும்
நமக்கு காதலர் 
தினம் தேவையில்லை...
இன்று,
மற்றுமொரு நாளே....!!
இருந்தாலும்,
"காதலர் தின"
வாழ்த்துக்கள்....!!!


வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...


உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...


இந்தக் காதலர் தினத்திலாவது
தந்துவிடுவாய்
என ஏக்கத்துடன் நான்...
பிரிவிற்கு பின்னும்
உன்னுடையதாகவே இருக்கும்
என்னிதயம்...
Tags

Top Post Ad

Below Post Ad