காதலர் தினம் வரும் 14-ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தை கொண்டாட, உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில் அன்பை வெளிப்படுத்தும் காதலர் தினத்தில், யார் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது குறித்து கிப்ட்ஈஸ்.காம் எனும் தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வின் ருசிகரத் தகவல் உங்களுக்காக..
காதலர் தினத்தன்று ஆண்கள், தங்களின் அன்புக் காதலிகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்க சராசரியாக 740 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர். இதேபோல, பெண்களும் தங்களின் கனவு நாயகர்களுக்காக சராசரியாக 670 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்தனர்.
ஆக காதலர் தினத்தில் ஆண்கள்தான் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 'காதலர் தினத்தன்று, என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்தான்.
இந்த ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதம் பேர், காதலர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதில் காதலர் தினத்தன்று, பரிசுப் பொருட்களை பொருத்தமட்டில் ஆண்கள் 42 சதவிகிதம் பேர் மலர்களை வைத்தே காதலிகளிடம் காதலை தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர். 27 சதவிகிதம் பேர் சாக்லேட்டு களையும், 19 சதவிகிதம் பேர் வாசனை திரவியங்களையும், 17 சதவிகிதம் பேர் மிகவும் வித்தியாசமான பரிசுகளையும் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
இதில் திருமணமான ஆண்களில் 41 சதவிகிதம் பேர் இன்னும் காதலர் தினம் கொண்டாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், திருமணமான பெண்களில் 31 சதவிகிதம் பேர் மட்டும் இந்த நாளை கொண்டாட விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆய்வில், 15 சதவிகிதம் பேர் காதலர் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் 29 சதவிகிதம் ஆண்களும், 31 சதவிகிதம் பெண்களும் ஒவ்வொரு முறையும் தங்களின் ஜோடிகளை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆய்வு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் காதலர்களே... காதலர் தினத்தன்று உங்கள் மனம் கவர்ந்தவருக்கு என்ன பரிசு கொடுத்து அசத்தப்போகிறீங்க... உங்களில் யார் அதிகமா செலவு பண்ணப்போறீங்க...?