எண் 1 சூரியன்
இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்டம், தொண்டர்கள் உடையவர்கள். கற்ற பெரியவர்கள் வீரம் உடையவர்கள். மண், மனை உடையவர்கள், மாற்று நாட்டினர்கள், தூதர்கள் சூழவாழ்வார்கள். குடும்பம் இரண்டு உடையவர்கள். புத்திரர்களால் பிரச்சினையும், நண்பர்களால் பலமும், மனைவியர் அடங்கி வாழக்கூடிய ஆளுமையும், தர்மம், நீதி நேர்மை, சரியான தீட்சண்யம் உடையவர்கள். சிவப்பு ரெத்தினம் தங்களுக்கு ராசியாகும். சந்திர எண் 2, குரு எண் 3-ம் ராசியானவை. எண் 4, எண் 7 இவர்களுக்கு நன்மை தராது. திங்கள், ஞாயிறு நல்ல நாட்கள் ஆகும். வெற்றி வாகைசூடி விரும்பியவற்றை அடைந்து நெருப்பு போல பிரகாசம் உடையவர்களாக இவர்கள் இருப்பார்கள். எண் 8-ல் தூண்டி விடப்படுவார்கள். ஆன்மபலம் பங்காளிகள் அதிகம் உடையவர்.
எண் 2 சந்திரன்
தாய் இல்லாமல் நாம் இல்லை. தானேயாரும் பிறப்பது இல்லை. எண் 2 சந்திரன் என்ற பூமியில் தாய்க்கு சொந்தமானது. ஆங்கில மாதம் 2, 11, 2,0 29-ம் தேதியில் தோன்றியவர்கள் பலன் பெரும் எண் 2. ஆத்மாவான சூரியனே மனதிற்கும் காரணம் ஆகி தன் ஒளியைப் பிரதிபலிக்கும் சந்திரன் இதமான தாய் எண் என்று சொல்லலாம். தலைமை தொழிற்காரர்கள் இருக்க இவர்களின் பிரதிபலிப்பு தொழிலைச் செய்வார்கள். சமூகநலத் தொழிலாக இவை இருக்கும். இதம், சவுகரியம், அழகு, நாகரிகம், அமைதி, மன்னிக்கும் குணம் எல்லோருடனும் சேர்ந்து பங்கிட்டு பகிர்வு கொள்ளும் குணம் உடையவர்கள். இவர் சுழற்சியில் நிலவு போல அழகான தோற்றம் முக்கியத்துவம். மற்றவர்களின் பிரதிபலிப்பு அதிகாரம் இவை உடையவர்கள். முத்து கடலில் பிறக்கும், இதை பட்டை தீட்ட வேண்டிய அவசியம் இல்லை. இவர்களும் உலகியலுக்கு நல்முத்தாக இருப்பார்கள். பாத்திரத்தின் வடிவை தன் வடிவமாக பெற்றிருப்பார்கள். தங்களுக்கு என்று தனித்துவம் இராது. கொள்கை பரப்பும் செயல் உடையவர்கள். வேண்டாத எண் 7. அதிர்ஷ்ட ரெத்தினம் முத்து, வழிபட வேண்டிய தெய்வம் அம்பாள். நாள் பௌர்ணமி. கொள்கை பிடிப்பில் நம்பிக்கை வேண்டும். எழுத்து தொழில், கலை படைப்புக்களை அவர்கள் செய்வார்கள். இளம் கலர் எப்போதும், நன்மை தரும். எண் 8. நல்ல வேலையாளாக அமையும், எண் 3 ராஜ யோகத்தை வளர்க்கும். நான்கு பக்கங்களிலும் இவருக்கு உதவிகள் உண்டாகும். முகம் வசியம் உடையவர்கள்.
எண் 3 குரு
எண் மூன்று புத்தி, புத்திரம், புகழ் இவற்றைக் கொடுக்க வல்லது. ஆங்கில தேதிகள் 3, 12, 21, 30ம் நாட்களில் தோன்றியவர்களின் எண் குரு எண் மூன்று ஆகும். மூப்பில்லாத இளமை உடையவர்கள், அறிவால் ஆளுமை உடையவர்கள். சத்திரம், அறக்கட்டளைகள், தர்மச்சாலைகள், பள்ளி கல்லூரி, கல்வி தளங்களை நிர்வாகம் செய்வார்கள். வயதான தாய், தந்தைக்கு கட்டுப்படுவார்கள். புத்திரர்கள், பேரக்குழந்தைகளின் விளக்காக வாழ்வார்கள். உலகியலுக்கு தாங்கள் எடுத்த முடிவை ஒட்டியே வாழ்வார்கள். தவசியாக தீர்க்க தரிசனம் உடையவர்களாக, தளராத முயற்சியால் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். இவர்களுக்கு இனிய எண் 9. 2, இரத்தினம் மஞ்சள் புஷ்பராகம், மஞ்சள் நிறம் சிறப்புடையது. தெய்வமும், நாட்டு பற்றும் தன் இருகண் எனக்கருதுவார்கள். வேண்டாத எண் 3. நிச்சயமாக இந்த எண்ணால் குழப்பம் உடையவர். இறந்த பின்னும் இருந்து கொண்டிருக்கும் செயல் உடையவர்கள்.
எண் 4 ராகு
இரு இனம் ஒரு உடல் கொண்ட எண் 4. குணம் மாற்றம், செயல் மாற்றம், நாடு மாற்றம், மொழி மாற்றம் இவர்களுக்கு அனுபவம். எண் 4-ல் பிறந்த நாட்கள் 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு உடையது. புகைக்கு உருவம் இல்லை, மின்சாரம் பார்க்க முடியாது, காந்த அலைகளையும் பார்க்க இயலாது. இவர்கள் சிந்தனை, செயல்கள் இவற்றின் காரணங்கள் மற்றவர் அறிய இயலாது. போக்கு வரத்து, தொலைத் தொடர்பு இயக்கங்கள் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் சாயல் கொண்டவர்கள் எண் 4-க்குடையவர்கள். புகை நிறம், ராசியாக இருக்கும். மாரி, குமாரி போன்ற தெய்வ பிடிப்பும், வயதான பாட்டியர்கள் உதவியும், மூத்த பாரம்பரியத்தை காட்டும் தோற்றம் உடையவர்கள். புகைத்தல், குடித்தல், நாடு சுற்றுதல் போன்ற வழியில் வருமானம் உள்ளவர்கள். காதல் இச்சை உடையவர்கள். ஆராய்ச்சியாளர்கள், சூது செய்து காரியம் கைக்கொள்வார்கள். வீரர்கள், மேதைகள், தியாகிகளாகவும் வாழ்வார்கள். கிளேச குணம் அமைதியின்மை சுபாவம், எண் 9, 3 நல்லதை செய்யும். எண் 8, 2, 1 தீங்கான எண்கள். கோமேதகம் ரத்தினம், கடினமான பாறைகள் ரசாயனத் தொழிற்சாலைகள் தனக்கு இருப்பிடம். கண்டுபிடிப்புகள், நவீன உலகம், இரவு நேரங்கள் உதவியாகவும், போட்டி, பந்தயங்கள், விளையாட்டு வீரவிருதுகள் இவற்றால் பலன்களும் அடைவார்கள். எண் 6 போன்றவர்களுடன் கூடி வாழ்வார்கள். நவீன காலத்தை பயன்படுத்தக் கூடியவர்கள்.
எண் 5 புதன்
எண்களின் செல்லப்பிள்ளை என்று கூறக்கூடிய எண் 5 புதன். இளவரசன் என்றும் சொல்லத் தகுதியான எண் 5. ஆங்கில தேதிகள் 5, 14, 23-ல் பிறந்தவர்களின் எண் இது. கம்பீரம் தெளிவு சுத்தம், நண்பன், உதவியாளன், கலை, ஆடல், பாடல் போன்ற செயல் எண். 5 இரு பக்கங்களிலும் தேவதையைப் போல இரு இருக்கைகள் உள்ள எண். தாராளமாக செலவு செய்வார்கள். வியாபாரம் உடையவர்கள் செல்வந்தர்கள் சுயநலம் உடையவர்கள். இளமையும், அறிவும், புத்திசாலித்தனமும், தன கவுரவமும் பாராட்டி வாழ்வார்கள். இசைஞானம் உடையவர்கள். கலை அறிவு உடையவர்கள். சாதகமான எண்கள் 5, 6, 1 அரசர்களின் மக்களைப் போல வாழ்வார்கள். ஆணைப் போலவும், வீரம் ஆளுமை, விசுவாசம், வெற்றியும், பெண்ணைப் போல நளினம், வளைந்து போகும் குணம், அச்சம், கலை, கவிதைகள் உடையவர்கள். தூய்மைக்கு சொந்தக்காரர்கள் ஆவார். எதிரிடையான எண் 9. ரெத்தினம் பச்சைகல். பச்சை நிறம் அம்புக் குறியிட்ட சின்னம். தூதுவன் செயல் உள்ளவர்கள். இவர்களின் குழந்தைகள் வெற்றி வாழ்வு உடையவர்கள். தாய், தாய் மாமன், சம்மந்திகள் கூட்டத்திற்கு இனிய மகள். வாகனம் நூதனமாக வைத்திருப்பார்கள்.
எண் 6 சுக்கிரன்
பொருள் இல்லாருக்கு இவ்வுலகில்லை அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை என்பதற்கு இணங்க பொருளுடைய எண் வங்கி கஜானா எண் 6 சுக்கிரன் எனப்படும் ஆங்கில தேதிகள் 6, 15, 24-ல் பிறந்தவர்களின் எண் 6. பார் புகழும் பந்தயங்கள் பதவிகள், பட்டங்களை மிக மிக சாதாரணமாக சாதிக்கக்கூடியவர்கள். கண் நோய் உள்ளவர்கள். கடின உழைப்பாளிகளுக்கு இவர்கள் எரிச்சல்படும் வகையில் வளர்ச்சி உடையவர்கள். தங்களுக்கு என்று ஒரு வழியும் அதன் சட்ட திட்டங்களை தாங்களே படைத்துக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். காதல் வாழ்க்கைக்கு காவியம் படைக்கக் கூடியவர்கள். தாய்மை குணம், மறக்கக் கூடியதும், மன்னிப்பு அளிப்பவர்களாகவும் தர்மம் இல்லாதவர்களின் அலங்காரம் தன்னிடம் இருக்கும். திறமை இல்லாதவர்களையும் வாழ வைப்பார்கள் இந்த சுக்கிரர்கள். பெருக்கமான வாழ்க்கை உடையவர்கள் நிறைவு உடையவர்கள். கொந்தளிப்பைக் காட்டுவார்கள். வாகனம் வகை வகையாக அனுபவிப்பார்கள். ஆடை அணி மணிகள் உடையவர்கள். கூட்டத் தலைமையின் வருமான வரி வகைகளைக் கணக்கிடுவார்கள். சொல்வாக்கும், செல்வாக்கும் உடையவர்கள். வைத்தியம், புகழ், பணம், வியாபாரம், பங்கு மார்க்கெட், கஜானா வங்கிகளில் பதவி வகிப்பார்கள். ஆக்கும் சக்தியும், உற்பத்தி சக்தியும் உடையவர்கள். சமுதாய தேவைகளை பூர்த்தி செய்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
எண் 7 கேது
முழுமை என்ற எண் 7. ஏழு கடல், ஏழு நிறம், ஏழு ரிஷி என்று உலகம் சுகிக்கும் சில முழுமையான இயற்கை தன்மையின் எண் 7 எனப்படும். கிரகங்களில் பாதி உடல் மனித உடலும், பாதி பாம்புத் தலையுமாக இருப்பதாக கருதுவார்கள். ஆனால் தேதி 7, 16, 25-ம் நாட்களில் பிறந்தவர்கள் முழுமையுடையவர்கள். ஞானத்தின் முழுமையான முனிவனாக முக்கால் வாசி உலக மக்கள் எண்ணும் ஏசு கிறிஸ்து, நியூட்டன் போன்றவர்கள் இந்த எண்ணின் ஆளுகையில் தோன்றியவர்கள். இவர்கள் தெய்வத்தின் பிள்ளைகளைப் போல இருப்பார்கள். இல்லற சுகங்கள் அற்பமாக இருக்கும். யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள். தங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை பிடித்துக் கொண்டு செயல்படுவார்கள். வைடூரியம் ரெத்தினமாகும். சந்திரன் எண் 2, சூரியன் எண் 1 இவை தனக்கு எதிரிடையான எண்களாக அமைகிறது. 6, 3 தனக்கு நட்பாகவும், இசைகலை பயிற்சி கூடங்கள் ஆராய்ச்சி மையங்கள் தனக்கு இருப்பிடமாக ஞானம் வளர உதவக் கூடியவர்களாகவும், வைத்தியம், நடனம், சோதிடம், அறிவியல் ஆராய்ச்சி செய்பவர்களாகவும் சாது, சன்னியாசிகளாகவும், ஆசிரியர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். தெய்வத்துக்கு சமமானவர்கள்.
எண் 8 சனி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். எட்டு லெஷ்மியும் பொருந்தி வாழப் பிறந்தவர்கள் எண் 8 ஆகி சனி எண்ணில் தோன்றியவர்கள். ஆங்கில தேதி 8, 17, 26-ல் பிறந்தவர்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் இளநிலைகளில் சிரமங்களை தாய், தந்தை இல்லாமல் அல்லது அவர்களால் சரியாக பராமரிக்காமல் தொல்லையான வாழ்க்கையையும் பின்னர் தாங்களே மற்றர்கள் விரும்பி ஏற்க முடியாத துறைகளில் வேலையை அமர்த்திக் கொண்டு சுயம்பு போல தங்களை வளர்த்துக் கொள்ளக் கூடியவர்கள். யாருடனும் கூடி இருக்க மாட்டார்கள். நாளுக்கு நாள் தங்கள் வழி தனி வழி என்பதை காட்டிக் கொள்வார்கள். அசிங்கம், தள்ளிவிடப்பட்ட தரம் இல்லாதவைகளில் கலையாக தரமானதாக குப்பையிலும் குண்டு மணி எடுப்பது போல இருக்கக் கூடியவர்கள் இவர்கள். ராசி எண் 2, 6. ராசி நிறம் நீலம். எதிரிடையான எண் 1, 9. ஏறிவாழ வந்தவர்கள், இம்சை பட்டு வாழ்க்கையைக் கண்டவர்கள். பொருள் பலமற்ற எல்லாம் பொருந்த வாழக்கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள். இருட்டு உலகம் என்றதையும் கண்டவர்களாக இருப்பார்கள்.
எண் 9 செவ்வாய்
புலி பசித்தாலும் பசிக்காவிட்டாலும் வேட்டையாடும். மின்சாரம் என்பதை எடுத்துக் கொண்டு வேலை செய்வது போக தாங்களே உற்பத்தியும் செய்வார்கள் என்பதற்கு உதாரணமானவர்கள் எண் 9-ல் பிறந்தவர்கள். ஆங்கில தேதி 9, 18, 27-ல் தோன்றியவர்கள் இவர்கள் ஆவார்கள். தாங்கள் உதவி செய்தவர்கள் தங்கள் நலத்தைப் பேண வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவார்கள். கன கூட்டம் என்பது தனக்கு பயன்படா விட்டால் அவற்றை விளக்கிக் கொள்வார்கள். மனைவி புகழ் உடைய பெண்ணாக இருக்கவேண்டும். பெரிய அதிகாரிகளாக அரச பிரதானிகளின் நம்பிக்கைவாதிகளாக இவர்கள் படைத்தலைவனைப் போல வாழ்வார்கள். பவளம் இயற்கையாக உள்ளபடி ஆபரணங்களில் பயன்படுவது போல தாங்கள் பிறப்பால் மற்றவர்களைப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள். கண்கள் செவ்வரி ஓடியதாக இருக்கும். முன்கோபி என்றுகூடக் கூறலாம். நற்பலன் செயல்களைச் செய்வார்கள். எண் 2, 3 இவற்றுடன் நட்பும் எண் 8, 5-ல் எதிர்ப்பும், பவளம் ராசியாகவும் அமையும்.
எல்லா எண்களும் அதன் அதன் தனித்தன்மைகள் உடையது. அந்த வகையில் செயல்பாடுகளைச் செய்து வந்தால் வாழ்க்கை வெற்றிக் கொடுக்கும்.