எந்த ராசி செக்ஸ்க்கு நல்லது? உங்கள் ராசிக்கு எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசையா?

சில மனிதர்கள் மட்டும் எப்படி படுக்கையில் மிகவும் ரொமான்டிக்காக அல்லது காட்டுமிராண்டியாக இருக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது வியந்ததுண்டா? உங்கள் படுக்கையறை நகர்வுகளை உங்கள் நட்சத்திரங்கள் தான் ஆள்கின்றனவா? உங்க ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இங்கு நாங்கள் உங்கள் பாலியல் விருப்பங்கள் குறித்து உங்கள் ராசிகள் என்ன சொல்கின்றன என்பதை கூறப் போகிறோம். 

இதனை வாசிக்கும் அனைவருக்கும் இது முற்றிலும் உண்மையாக இல்லாமல் இருக்கலாம், மேலும் சிலர் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் இதனை படித்து பார்க்கவும். மேலும் இது எவ்வளவு உண்மை என்பதை எங்களிடம் கூறவும். உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா...? 


மேஷம் (மார்ச் 21 முதல் ஏப்ரல் 19) மேஷத்தில் பிறப்பவர்கள் தலைவர்கள் என்பதை உலகமே நன்கு அறியும். ஆனால் அவர்கள் படுக்கையில் வித்தியாசமானவர்கள் இல்லை. அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் அதிகாரம் செய்பவர்கள். அவர்களே எப்போதும் அதிகாரம் எடுத்துக் கொள்வார்கள். ஒருவர் முன்னணி எடுப்பது சிறந்தது என்ற போது அவர்கள் எப்போதும் அடிபணிவதில்லை. நீங்கள் இணங்கி போகும் தன்மை கொண்டவராக இருந்தால், மேஷம் உங்களுக்கு சிறந்த பொருத்தம் ஆகும். 


ரிஷபம் (ஏப்ரல் 20 முதல் மே 20) ரிஷபக்காரர்கள் படுக்கையில் மென்மையான உணர்வுகளைக் கொண்டவர்கள். அதிக ரொமான்ஸ் மற்றும் திருப்திகரமான செக்ஸ் எதிர்பார்க்கலாம். அவர்கள் விஷயங்களை மெதுவாக எடுத்து செல்ல விரும்புவார்கள். எனவே அவர்கள் முன்விளையாட்டு மற்றும் சில ஆழமான உணர்ச்சிகளை உடலுறவின் போது விரும்புவார்கள். ரொமாண்டிக் திரைப்படங்களில் வருவது போன்ற செக்ஸ் நிகழ்வுகளை நீங்கள் விரும்பினால் ரிஷபமே உங்களுக்கானது. 


மிதுனம் (மே 21 முதல் ஜூன் 20) அனைவரும் அறிந்தது போல மிதுனக்காரர்கள் பிளவு மனோபாவங்கள் கொண்டவர்கள். அவர்களது ஒவ்வொரு செக்ஸ் தொடரும் வெவ்வேறாக இருக்கும். இது அவர்களுக்கு எளிதில் போரடிக்கும் என்பதைக் குறிக்கிறது. இந்த ராசிக்காரர்கள் உங்களுடன் இணைய நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் துடிப்புடனும் இருக்க வேண்டும். 


கடகம் (ஜூன் 21 முதல் ஜூலை 22) கடகக்காரகளுக்கு செக்ஸ் ஒரு விவகாரமான விஷயமாகும். இவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமானவர்கள். இந்த ராசிகாரர்களுடனான செக்ஸ் உறவு ஒவ்வொரு பகுதியும் ரொமண்டிக்காக இருக்கும். 


சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22) கடித்தல், முனகுதல், அவுட்டோர் செக்ஸ் என ஆபாச படங்களில் பார்க்கும் அனைத்தையும் இவர்களிடம் எதிர்பார்க்கலாம். 


கன்னி (ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 22) தோற்றம் ஒருவரை ஏமாற்றும் என்பதற்கான மிகப் பெரிய எடுத்துக்காட்டாக கன்னி ராசிக்காரர்களை விட வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் மிகவும் பணிவானவர்கள் போன்று இருந்தாலும், படுக்கையில் விலங்கு போன்று இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கடுமையான செக்ஸை இவர்களிடம் எதிர்பார்க்கலாம். 


துலாம் (செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22) துலாம் ராசிக்காரர்கள் கவனத்தை விரும்புவார்கள். இவர்கள் படுக்கையில் உணர்ச்சிமிக்கவராக இருப்பார்கள் மற்றும் இவர்களுடனான செக்ஸ் முன்விளையாட்டு மயக்கும் தன்மை கொண்டிருக்கும். 


விருச்சிகம் (அக்டோபர் 23 முதல் நவம்பர் 21) ஒரே வரியில் விருச்சிக ராசி காரர்கள் கடுமையானவர்கள். அன்பு, விளையாட்டு, அவுட் டோர் செக்ஸ் என நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம். இவர்கள் ராசி வட்டத்தில் அதிக பாலியல் உந்துதல் பெறுகின்றனர். 


தனுசு (நவம்பர் 22 முதல் டிசம்பர் 21) இவர்கள் வாழ்க்கையிலும், படுக்கையிலும் எப்போதும் சாகசம் தேடுபவர்கள். பொது இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதில் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 


மகரம் (டிசம்பர் 22 முதல் ஜனவரி 19) இவர்களிடம் செக்ஸ் அதிகம் இருக்காது. அதற்காக இவர்கள் படுக்கையில் சரி இல்லை என்பது அர்த்தமில்லை. அவர்களுக்கு ஒரு சரியான மனநிலை தேவை. அவர்களை ஒரு முறை ஆன் செய்து விட்டால் நல்ல செக்ஸ் பெறலாம். 


கும்பம் (ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18) இவர்களுக்கு வெறுமனே படுக்கையில் செக்ஸ் இருந்தால் போதுமானது. இவர்கள் சூடான பேச்சுகள் மற்றும் போன் செக்ஸ் போன்றவற்றில் அதிக நெருக்கம் காட்டுவார்கள். நீங்கள் ஒரு கும்ப ராசி காரரை டேட்டிங் செய்வதாக இருந்தால், அங்கு சில மனம் கவரும் ஆச்சரியங்கள் இருக்கும்.


மீனம் (பிப்ரவரி 19 முதல் மார்ச் 20) இவர்கள் செக்ஸை விட காதல் செய்வதையே அதிகம் விரும்புவர். நீங்கள் கடந்து வந்தவர்களிலேயே இவர்கள் தான் உணர்ச்சிப் பூர்வமான காதலர்கள். இவர்களிடம் அதிகப்படியான தொடுதல் மற்றும் உடல் விளையாட்டுக்கள் இருக்கும். மேலும் இது முடிவு நிலையை மறக்க இயலாத ஒன்றாக மாற்றும்.