அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

அட கவனமா இருங்க.. இந்த ராசிக்காரர்கள் இதற்கெல்லாம் பொய் சொல்லுவார்களாம்!!!

ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேஷம்:
பெரும்பாலான நேரங்களில் அமைதியாக காணப்படும் மேஷ ராசி நண்பர்கள், பொய் சொல்வது குறைவு என்றாலும் பல நேரங்களில் உண்மையை மறைத்துவிடுவார்கள். இவர் பொய் சொன்னாலும் அதை கட்சிதமாக யோசித்து சொல்லுவார். நான் எதற்கும் எப்போதும் பயப்படவே மாட்டேன் என்று இவர்கள் பொய் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் சிறி சிறு விசயத்திற்கு கூட பயப்படுவார்கள்.


ரிஷபம்:
ரிஷப ராசி நண்பர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களை பற்றி யோசிப்பார்கள். ஆனால் இவர்கள், நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன் என்று பொய்யுரைப்பார்கள். கவலைகளை மனதில் பூட்டி வைத்துக்கொண்டு எந்த கவலையும் இல்லை என்பதே இவர்கள் அதிகம் கூறும் பொய்.


மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் அதை இவர்கள் வெளியில் காட்டிக்கொள்ள தயங்குவார்கள். யாரேனும் இவர்களிடம் ஏன் இவளவு டல்லாக இருக்குறீர்கள் என்று கேட்டல் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பார்கள் தவிர, உண்மையில் தங்களுக்கு உடல் நலம் சரி இல்லை என்பதை சொல்ல மாட்டார்கள். இதுவே இவர்கள் கூறும் அதிக பொய்.


கடகம்:
கடக ராசிக்கார்கள் எப்போதும் தங்களது உறவுகளை நன்கு மதிப்பவர்கள். உதாரணத்திற்கு தன் மனைவியிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை பற்றி வெளியில் சொல்லமாட்டார்கள். யாரேனும் கேட்டால் கூட எதுவும் இல்லை என்று பொய்யுரைப்பார்கள். இதற்கு கரணம் தன் மனைவியை யாரும் வெறுக்கக்கூடாது என்பது. இப்படி தான் மற்ற உறவுகளையும் இவர்கள் நேசிப்பார்கள்.


சிம்மம்:
சிம்ம ராசிக்கார்கள் கொஞ்சம் சம்பாதித்தாலும் நிறைய சம்பாதிப்பது போல பாவனை காட்டுவார்கள். இது சில நேரங்களில் இவர்களுக்கு பிரச்சனையாக முடியும். பண நெருக்கடியான சூழல்களில் இவர்களில் தன் நண்பர்களிடம் கடன் பெறுவது கடினம். அதற்கு காரணம் இவர்கள் பணக்காரர்கள் போல காட்டிய பந்தாதான்.


கன்னி:
கன்னி ரசிகர்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகம். சில நேரங்களில் இவர்களுக்கு மற்றவர்கள் உதவி தேவையாக இருக்கும் ஆனால் மற்றவர்கள் வந்து இவர்களிடம் ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டால், அதெல்லாம் வேண்டாம் என்று கௌரவத்திற்காக பொய் உரைப்பார்கள்.

துலாம்:
துலாம் ராசிக்கார்களிடம் எதிரிகள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது அவசியம், இவர்களை யாரேனும் சீண்டி விட்டு பின் மன்னிப்பு கேட்டால் மன்னித்துவிட்டேன் என்று சொல்வார்கள். ஆனால் அது இவர்கள் உரைக்கும் பொய். உண்மையில் இவர்கள் தக்க நேரத்தில் பழிவாங்கிவிடுவார்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கார ஆண்கள் சிலர் மதுவை சற்று விரும்புவார்கள், ஆனால் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூட அதை பற்றி பொய் உரைப்பார்கள். விருச்சிக ராசி பெண்கள் சிலர் கணவனிடம் முத்தத்தை எதிர்பார்ப்பார்கள், கவனவன் அதை கொடுத்தாலும் இவர்கள் கொடுக்கவில்லை என்று பொய் உரைப்பார்கள்.


தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் தனிமை விரும்பிகள், ஆனால் அதற்காக இவர்கள் எப்போதும் சிங்கிளாக இருந்தால் கூட நன்றாகத்தான் இருக்கும் என்று பொய்யுரைப்பார்கள். ஆனால் உண்மையில் இவர்களின் மனதில் காதல், திருமணம் என மற்ற ஆசைகளும் இருக்க தான் செய்யும்.


மகரம்:
மகர ராசிக்கார்கள் பந்தா காட்டுவதில் சிறந்தவர்கள். கையில் பத்து பைசா இல்லை என்றாலும் பந்தாவாக காட்டிக்கொள்வார்கள். பல நேரங்களில் இவர்கள் அதிக மனவலிமை உடையவர்கள் போல காட்டிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் இவர்களுக்கு குழந்தை மனசு.


கும்பம்:
கும்ப ராசிக்கார்கள் பெரிய விஷத்தை எல்லாம் விட்டுவிடுவார்கள். ஆனால் சின்ன சின்ன விசயத்திற்கு பொய் சொல்வார்கள். உதாரணத்திற்கு, அலுவலகத்தில் வெட்டியாக இருந்தாலும், தன்னுடைய மேல் அதிகாரி ஏதாவது வேலை சொல்லும் சமயத்தில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள்.


மீனம்:
மீனா ராசிக்கார்கள் பெரும்பாலும் தன் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்கள் அதிகம் பொய்யுரைப்பதில்லை அப்படியே உரைத்தாலும் அது மிகவும் இக்கட்டான சூழலாக இருக்கும்.

இது பொதுவாக கணிக்கப்பட்ட ராசி பலன். ஜாதகத்தை பொறுத்து இதில் சில மாறுதல்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.