அடிக்கடி உடலுறவு கொண்டால் எப்படி அழகு அதிகரிக்கும் என்பது தெரியுமா?

திருமணத்திற்கு பின் தம்பதிகளின் அழகு சற்று அதிகரித்துக் காணப்படும். அது ஏன் தெரியுமா? அதற்கு காரணம் உடலுறவு தான். ஆம், உடலுறவில் ஈடுபடும் போது அலாதியான இன்பத்தை அடைவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் சரும அழகும் அதிகரிக்கும்.

மேலும் ஆய்வுகளிலும் அடிக்கடி உடலுறவு கொண்டால், ஒருவரின் அழகு கட்டாயம் அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடலுறவில் ஈடுபடும் போது உடலினுள் ஏற்படும் குறிப்பிட்ட ஹார்மோன் மாற்றங்கள் ஓர் காரணம்.

இப்போது அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் கிடைக்கும் அழகு நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அழகு நிலையங்களுக்கு சென்று அழகை அதிகரிக்காமல், உங்கள் துணையுடன் படுக்கையில் புகுந்து விளையாடுங்கள்.

சரும வறட்சி குறையும்
அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, அதனால் சரும வறட்சி ஏற்படுவது குறையும். மேலும் சருமம் மென்மையும் அதிகரிக்கும்.

முகப்பரு குறையும்
உடலுறவில் ஈடுபடுவதால், ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து, அதன் உற்பத்தி சீராக்கப்பட்டு, முகப்பரு வருவது குறையும்


இளமை தோற்றம்
அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால், கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும செல்களின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும். எப்படியெனில் உடலுறவில் ஈடுபடும் போது, இளமைக்கு காரணமான DHEA என்னும் ஹார்மோனின் உற்பத்தி தூண்டப்படும்.

பொலிவான முகம்
உடலுறவில் ஈடுபடும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதோடு, வியர்வை அதிகம் வெளியேறுவதால் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேறி, பொலிவு அதிகரித்து காணப்படும்.

ஆரோக்கியமான நகங்கள்

உடலுறவில் ஈடுபடும் நேரத்தில், நகங்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியதை மேம்படுத்தும் குறிப்பிட்ட ஹார்மோன்கள் வெளியிடப்படும். இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான நகங்களைப் பெறலாம்.

எடை குறைவு
ஒரு மணிநேரம் உடலுறவில் ஈடுபட்டால் 300 கலோரிகளை எரிக்க முடியும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்களின் எடையைக் குறைத்து, சிக்கென்று காட்சியளிக்க, ஜிம் சென்று நேரத்தை வீணடிக்காமல், துணையுடன் படுக்கையில் நேரத்தை செலவிடுங்கள்.


ஆரோக்கியமான தலைமுடி
அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக தலைமுடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி உடலுறவில் ஈடுபடுங்கள்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad