உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள்!

உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது உண்டு. ஆண்கள், வேகமாக செயல்படும் போதோ, அல்லது வலியாலோ தான் பெண்கள் அழுகிறார்கள் என்று தான் பொதுவான கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக செய்யும் சில செயல்களாலும் கூட பெண்கள் அழுவதுண்டு. 
உண்மை #1 உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக பெண்ணுறுப்பிற்கு பதிலாக, ஆசனவாய் பகுதியில் ஆண்குறியை செலுத்தும் போது பெண்கள் அழுவதுண்டு. இதை ஆண்கள் தவறுதலாக செய்தாலும், இது பெண்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தக் கூடியது ஆகும். 

உண்மை #2 தன் கணவன் தன்னை ஏமாற்றுவதை அறிந்தும் கூட, அவர் விருப்பத்திற்கு இணங்கி உறவில் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். ஏமாற்றும் ஓர் நபருடன் ஒன்றாக வாழ்வதே தவறு. அதிலும், அவருடன் அவரது வெறும் இச்சை உணர்விற்காக மீண்டும் உறவில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறுகின்றனர்.

உண்மை #3 உணர்ச்சிபூர்வமான வெறுப்பு, அல்லது உடல் ரீதியான வலி இருக்கும் போது, உறவில் ஈடுபட துணை விரும்பி அழைத்து, மறுக்க முடியாமல் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். மேலும், இது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர். 

உண்மை #4 நீண்ட கால பிரிவு அல்லது மன கசப்பிற்கு பிறகு உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு அழுகை வருகிறதாம். மேலும், அந்த தருணத்தில் அவர்களது மனதில் எழும், பிரிந்த, பிரிந்ததற்கு முந்தைய நினைவுகள் வந்து செல்வதாலும் அழுகை வருகிறது என கூறியுள்ளனர். 
உண்மை #5 வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் / நாடுகளில் பணிபுரியும் தம்பதிகள் பெரிய இடைவேளைக்கு பிறகு தான் உடலுறவில் ஈடுபடுவர்கள். அந்த தருணத்தில் தாங்கள் இழந்த தருணங்கள் மற்றும் சந்தோசங்களை நினைக்கையில் பெண்களுக்கு அழுகை வருகிறதாம். 

உண்மை #6 பழைய நினைவுகள்! சில பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, தங்கள் வாழ்க்கையில் நடந்த பழைய கசப்பான நினைவுகள் எண்ணியும் கூட அழுகிறார்கள். இது போன்ற தருணத்தில் அழுகையை அடக்க முடிவதில்லை, ஏன் அழுகிறோம் என்ற காரணத்தை வெளியே கூறவும் முடிவதில்லை என பெண்கள் கூறியிருக்கின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad