ஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இதோ சில அற்புத வழிகள்!

வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதில் பலர் க்ரீம்களைப் பயன்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டாலும், இயற்கை வழிகளை முயற்சித்தால், அதனால் கிடைக்கும் பல நிரந்தரமானதாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம்.

குங்குமப்பூ
சிறிது குங்குமப்பூவை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படுவதை நன்கு காணலாம்.


தயிர் 
பலரும் தயிர் சருமத்திற்கு ஈரப்பசையை மட்டும் தான் வழங்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டவை. அதற்கு வெறும் தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.


எலுமிச்சை மற்றும் பால் பவுடர் 
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள கருமை நீங்கி சரும நிறம் அதிகரிக்கும்.



வெள்ளரிக்காய் மற்றும் தேன் 
வெள்ளரிக்காய் சாற்றில் தேன் கலந்து, முகத்தில் தடவி வர, சரும வறட்சி நீங்குவதோடு, சரும நிறமும் மேம்படும்.


முட்டை வெள்ளைக்கரு 
முட்டையின் வெள்ளைக்கருவை வாரத்திற்கு 2 முறை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள அழுக்குகள், கருமைகள் முழுமையாக நீங்கி, முகம் பொலிவோடும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும்.


பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர்
தினமும் இரவில் படுக்கும் முன் பச்சை பாலில் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவுவதன் மூலமும், சரும நிறத்தை அதிகரிக்கலாம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சரும நிறம் அதிகரிக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad