நம் இந்திய புராணத்தில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஊர்வன வகைகளில் ஒன்றான பல்லியின் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் அந்த பல்லி எழுப்பும் சப்தம் மற்றும் அது நம்மீது விழுந்தால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
நம் பண்டைய புராணத்தில் இதற்கெனவே ஒரு படிப்பு உள்ளது என்பது தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம். இந்த பல்லி சாஸ்திரத்தில், பல்லி கத்துவது, பல்லி நம் உடலில் விழுந்தால் என்ன பலன் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் பார்க்கப் போவது பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி தான்.
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்
வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்
முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி
மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை
தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்
நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்
மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை