நீங்களும் அழகான ஆணாக மாற சில டிப்ஸ்..!

ஒவ்வொரு ஆணுக்கும் தான் அழகாக திகழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். மேலும் தன் அழகால் பல பெண்களை கவர வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வுலகில் அகத்தோற்றத்தை விட, வெளித்தோற்றத்தைக் கொண்டு தான் ஒருவரை பற்றி பேசுகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது.

எனவே ஆண்களும் தற்போது தங்களின் அழகின் மேல் அதிக அக்கறை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதற்காக பல செயல்களை பின்பற்றுகின்றனர். மேலும் நல்ல தோற்றமானது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

ஆகவே ஆண்களே உங்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரிக்க சில டிப்ஸ்களை தமிழ் போல்ட்ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி, அழகை மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

நரை முடி
தற்போது பலருக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. உங்களுக்கு நரை முடி அதிகம் இருந்தால், அதனைக் கொண்டே அற்புதமான தோற்றத்தில் ஜொலிக்க முடியும். ஆனால் அதற்கு அவ்வப்போது ட்ரிம் செய்வதோடு, கண்டிஷனர் போட்டு முடியை அலச வேண்டும். இதனால் முடி மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருக்கும்.

பெர்ஃப்யூம்
வியர்வை நாற்றம் அடிக்கக்கூடாதென்றும், நம் உடல் நல்ல நறுமணத்துடனும் இருக்க, பெர்ஃப்யூம்களை அடிக்க வேண்டியது தான். ஆனால் பெர்ஃப்யூம் பாட்டில் போல் மணம் வீசாமல், அளவாக அடித்து அளவான நறுமணத்துடன் இருங்கள்.

தாடி
தற்போது தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகிவிட்டது. மேலும் தாடி வைத்துள்ள ஆண்களே பெண்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றனர். எனவே தேவதாஸ் போல் நீளமாக தாடி வைக்காமல், ஸ்டைலாக தாடி வைத்துக் கொள்ளுங்கள்.

வழுக்கை
முடி அதிகம் உதிர்ந்து, வழுக்கைத் தலை வந்துவிட்டதா? அப்படியெனில் கவலைப்படாதீர்கள். வழுக்கை இருந்தால், அதற்கு ஏற்ற ஸ்டைலை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக, வழுக்கை இருக்கும் பெரும்பாலான ஆண்கள் அதை மறைப்பதற்கு மொட்டை அடித்து, அதற்கேற்ப ஸ்டைலைப் பின்பற்றுகின்றனர். வேண்டுமெனில் இதில் நீங்கள் பின்பற்றலாம்.

கட்டுக்கோப்பான உடல்
பெரும்பாலும் பெண்களுக்கு உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ளும் ஆண்களைப் பிடிக்கும். எனவே ஜிம் சென்று உடலை கட்டுக்கோப்புடன் பராமரித்து வாருங்கள்.

ஃபேஸ் பேக் அல்லது ஃபேஷியல்
முகத்தில் உள்ள அதிகப்படியான அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற, வாரம் ஒருமுறை ஃபேஷியல் அல்லது ஃபேஸ் பேக்கை போடுகள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி, முகம் பளிச்சென்று பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மஞ்சள் பற்களுக்கு ‘பை’ சொல்லுங்கள்
நீங்கள் புகைப்பிடிப்பவரா? அப்படியெனில் உடனே அந்த பழக்கத்தை கைவிடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் உடல் பாதிப்பதோடு, பற்களின் ஆரோக்கியமும் அழகும் பாதிக்கப்படும். மேலும் தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் உப்பு சேர்த்து துலக்குங்கள். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகலும்.

ஈர்க்கும் கண்கள்
இரவு நேர பார்ட்டிகள் மற்றும் நீண்ட நேரம் டிவி பார்ப்பது போன்றவற்றினால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் கண்கள் பொலிவிழந்து, கண்களைச் சுற்றி கருவளையங்கள், சிவப்பான கண்கள், கண்களைச் சுற்றி சுருக்கங்கள் போன்றவை ஏற்பட்டு, கண்களின் அழகே போய்விடும். எனவே அழகான கண்களைப் பெற இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

விரல் நகங்கள்
உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள விரல்களில் நகங்கள் பெரியதாக வளர்ந்திருந்தால், அவற்றை வெட்டி விடுங்கள். குறிப்பாக வாரம் ஒருமுறை நகங்களை வெட்டிவிடுவது, கை விரல்களை அழகாக வெளிக்காட்டும்.

பொருத்தமான உடைகள்
முக்கியமாக வெளியே செல்லும் போது, இடங்களுக்கு தகுந்தவாறான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து செல்லுங்கள். இது தான் உங்களின் தோற்றத்தையே சிறப்பாக வெளிக்காட்டும்.
Tags

Top Post Ad

Below Post Ad