இது ஒரு கனவன் மனைவிக்கு இடையில் நடந்த சோகம் நிறைந்த ஆனந்தக்கதை!

ஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்.

வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும்வேகமாக நடக்கத் தொடங்கினர்.

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச்சாரலோடு கும்மிருட்டும்சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள்.

அதோடு, மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ளபாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தால்.

இருட்டில் எதுவும் தெரியவில்லை.மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்றுகொண்டிருப்பதுதெரிந்தது.

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்., கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது…இப்படிபயந்து அழைக்கிறேன்.என்ன மனிதர் இவர்?? திரும்பி கூட பார்க்கவில்லையே… என, மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தைகடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தைகடந்துவிட்டாள்.கணவரை கோபத்தோடுபார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தகயிற்றுப்பாலத்தை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்….

அதை பார்த்த அவள், கண்களில் கண்ணீர் வடிய கணவரை கட்டியணைத்தாள்!!!சில சமயம் கணவர் குடும்பத்திற்குஎதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாகதோன்றும்.

ஆனால்,.உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார்.தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போலஇருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்…..

வாழ்க்கை ஒரு விசித்திரமானவிந்தை.தூரத்தில் இருப்பது தெளிவாகதெரிந்தாலும், அருகில்வரும்போது மட்டுமேபொருள் புரிகிறது!!!

உண்மையானஅன்போடும்,நிலையான நம்பிக்கையோடும்வாழ்க்கையை நடத்துங்கள்
Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.