ஏவுகணை மழை… வாழ்வா? சாவா? 20 லட்சம் அலெப்போ மக்களின் நிலையை பாருங்கள்

சிரியாவில் கிளர்ச்சி யாளர்கள் வசம் இருக்கும் அலெப்போ நகரை மீட்க ராணுவம் ஏவுகணையை மழைபோல் வீசியதில் வீடு கள் தரைமட்டமானது.

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதில் சுமார் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனவே இந்தஉள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும், ரஷியா வும் எடுத்த முயற்சியில் ஒரு வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் கடந்த 19-ந் தேதியே போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. இதனால் மீண்டும் உள்நாட்டு போர் தொடங்கியது.

சிரியாவின் மிகப்பெரிய 2-வது நகரமாக அலெப்போ வும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ளது. அதை மீட்க ராணுவம் பல முறை அங்கு தாக்குதல் நடத்தியது. இருந்தும் அந் நகரை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் களம் இறங்கியுள்ளது. நேற்று அலெப்போ நகரில் சிரியா மற்றும் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பேரல் குண்டுகளையும், ஏவுகணைகளையும் மழை போல் பொழிந்து தாக்கியது.

இதனால் அலெப்போ நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. எனவே இருக்க இடமின்றி பொதுமக்கள் தவிக்கின்றனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலெப்போ பகுதியில் நடந்த ஏவுகணை மற்றும் குண்டு வீச்சில் அன்சார் மாவட்டம் மிக பெருமளவில் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது. அங்கு தண்ணீர் பற்றாக்கஊரையால் 20 லட்சம் மக்கள் தவிக்கின்றனர்.