துபாயில் மிக உயரமான கட்டிடத்தில் 22 அடுக்குமாடி வீடுகளை விலைக்கு வாங்கிய இந்தியர்

துபாயில் மிக உயரமான கட்டிடத்தில் 22 அடுக்குமாடி வீடுகளை இந்தியர் விலைக்கு வாங்கியுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் ஜார்ஜ் வி நீரேபரம்பில். இவர் துபாயில் மெக்கானிக் ஆக பணிபுரிகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ‘புர்ஜ் கலீபா’ என்ற உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்பட்டது.

பல அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடத்தில் 900 வீடுகள் உள்ளன. அவற்றில் 22 வீடுகளை இவர் விலைக்கு வாங்கி அவற்றின் உரிமையாளர் ஆக மாறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது, “புர்ஜ் கலிபா கட்டிடம் பகுதிக்கு நான் எனது உறவினர் ஒருவருடன் சென்றேன். அப்போது அவர் என்னை பார்த்து, ‘இதோ பார் இக்கட்டிடத்துக்குள் உன்னால் நுழைய முடியாது’ என கிண்டல் செய்தார்.

அன்று முதல் எனக்குள் ஒரு வைராக்கியம் ஏற்பட்டது. எப்படியாவது இங்கு வீடு வாங்கி குடியேற வேண்டும் என விரும்பினேன். அதை தொடர்ந்து கடுமையாக உழைத்து பல வியாபாரங்கள் செய்தேன்.

2010-ம் ஆண்டு ‘புர்ஜ் கலிபா’ கட்டிடம் திறக்கப்பட்டது. அப்போதே அங்கு ஒரு வீடு வாங்கி குடிபுகுந்தேன். அதை தொடர்ந்து அங்கு 22 வீடுகள் விலைக்கு வாங்கியிருக்கிறேன்.

இத்துடன் எனது கனவும், சவாலும் முடியவில்லை. தொடர்ந்து இன்னும் இங்கு பல வீடுகளை விலைக்கு வாங்குவேன். தற்போது இங்குள்ள தனியார் வீட்டு உரிமையாளர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமையாக உள்ளது” என்றார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad