சவுதியில் தமிழ் பெண் அடித்து கொலை: காரணம் என்ன

சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது கணவரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மலமஞ்சணூர்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் மனைவி பூங்காவனம் கடந்த 7 மாதங்களுக்கு முன் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றார்.

கடந்த மாதம் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிய பூங்காவனம், தனது முதலாளி தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக கூறியிருந்தார்.

தற்போது பூங்காவனம் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், பூங்காவனத்தின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவரது உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.