மாணவிக்கு பாலியல் தொல்லை ; தலைமையாசிரியர் இடைநிறுத்தம்

பாடசாலை தலைமையாசிரியர் தரம் 6 மாணவியை பாலியல் நொந்தரவு செய்ததாக எழுந்த முறைப்பாடின் பின் தலைமறைவாகினார். இந்நிலையில் அவரை பணியிலிருந்து இடைத்நிறுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரை, திருமங்கலம் அருகே கரடிக்கல்லில் அரசு கள்ளர் உயர்நிலைப் பாடசாலையின் தலைமையாசிரியர் மாடசாமி கடமையாற்றியுள்ளார்.

குறித்த நபர் அந்த பாடசாலையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முறைப்பாடு எழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக தலைமையாசிரியர் மாடசாமி மீது திருமங்கலம் மகளிர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாடசாமியை பணி இடைநிறுத்தம் செய்து கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.