சிறுமியின் நிர்வாண புகைப்படம் அகற்றல் ; சர்சையில் பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க நேபாள சிறுமி ஒருவர் நிர்வாணமாக ஓடி வரும் காட்சியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நோர்வே பத்திரிக்கையொன்று தெரிவித்துள்ளது.

பல வாரங்களுக்குமுன், நோர்வே எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியதை தொடர்ந்து அவரது பதிவும் நீக்கப்பட்டது.

இது குறித்து சர்ச்சை எழவே,தற்போது குறித்த புகைப்படத்தை பதிவு செய்ய அனுமதி அளித்துயுள்ளது.

வியட்நாம் போரின் போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி பான் தி கிம் ப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தார். அவர் அணிந்திருந்த உடைகளை கழற்றியெறிந்து கதறியபடி நிர்வாணமாக ஓடி வந்த காட்சி அனைவரது மனதையும் பதைபதைக்கச் செய்தது.

போரின் கொடூரத்தினை உணர்த்தும் இந்தச் சிறுமி ஓடிவந்த காட்சியை படம்பிடித்த உட் என்பவருக்கு புகைப்படத்துறையின் சிறந்த விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவரை 1994 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார். 1997 இல் கிம் ப்யூக் ‘Kim Phuc Foundation’ என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தினை ஆரம்பித்து, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து ‘Kim Phuc Foundation International’ என்ற பெயரில் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad