முதல் கணவருக்கு அல்வா! கள்ளக்காதலனுடன் ஓட்டமெடுத்த மனைவி

தமிழகத்தில் முதல் கணவருக்கு தெரியாமல், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுமதி(56), இவருக்கு பவித்ரா(21) என்ற மகள் இருக்கிறார்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும், பவித்ராவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளது.

கிருஷ்ணகிரியில் தொழில் சரிவராத காரணத்தினால் பவித்ராவின் கணவர், வேலூர் மாவட்டத்தில் உள்ள பவித்ராவின் தாயார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் பவித்ரா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பவித்ரா ஆம்பூரில் தங்கியிருப்பது அவர்களுக்கு தெரிவந்தது. அங்கு சென்று விசாரித்த போது, பவித்ரா, தீனதயாளன்(30) என்பவரை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.

அது மட்டுமில்லாமல் பவித்ரா, அவருடைய தாயார் மற்றும் முதல் கணவரிடம்(லட்சுமணன்) தான் சந்தோஷமாக இருப்பதாகவும், தன்னை தொந்தரவு செய்யாமல் இங்கே இருந்து கிளம்பி விடுங்கள் எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், பவித்ரா மீது பொலிசில் புகார் அளித்துள்ளார். விசாரணையின் போது பவித்ரா தான் தீனதயாளன் (இரண்டாவது கணவர்) உடன் வாழ விருப்பம் உள்ளதாகவும், இதைத் தடுத்தால் தான் தற்கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக பொலிசார் பவித்ராவை இரண்டாவது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad