அமெரிக்காவிலும் கப்பலேறியது கர்நாடக மானம் -ஒபாமா எச்சரிக்கை

கர்நாடகாவில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இன துவேசம் காரணமாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து இந்தியா தாண்டி அமெரிக்காவிலும் கர்நாடகாவின் மானம் கப்பலேற துவங்கியுள்ளது.

பெங்களூருவில் வசிக்கும் அமெரிக்கர்கள் பத்திரமாக இருக்கும் படி அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பெரிய வளர்ந்த நகரங்களில் பெங்களூருக்கு தனி இடம் உண்டு. வெளிநாடு வாழ் தலைவர்கள் முதலீடு செய்யவும், விரும்பி வரும் மெட்ரோ நகரமாக பெங்களூரு உள்ளது.

ஐடி துறையில் பெங்களூருவின் வளர்ச்சி அபரிதமானது. கம்ப்யூட்டர் நவீன நாகரீகம் , பண்பான குணம் கொண்ட அமைதியான மக்கள் , நாகரீகமானவர்கள் என்று இதுவரை கர்நாடகாவில் ஐடி துறையில் முதலீடும் செய்துள்ளது அமெரிக்கா.

பெங்களூருவில் மட்டும் ஐ.டி துறையில் சுமார் 30 ஆயிரம் அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். பெங்களூருவின் சூழலில் தமது நாட்டை சேர்ந்தவர்கள் அமைதியாக சந்தோஷமாக தொழில் நடத்துவார்கள் என்று நம்பி அனுப்பிய அமெரிக்கர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது.

தற்போது பெங்களூருவில் நடக்கும் கலவரம் காரணமாக பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதும் சாலையெங்கும் கலவரக்காரர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைப்பதும், கும்பலாக வன்முறையில் ஈடுபடுவதும் வாட்ஸ் அப், ஃபேஸ் புக், டுவிட்டர், வலைதளம் என உலகெங்கும் வைரலாகி வருகிறது.

சாதாரண தண்ணீர் பிரச்சனைக்காக ஒரே நாட்டின் மக்கள் பிரிந்து போராடுவது வன்முறையில் ஈடுபடுவது, அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது அமெரிக்காவில் கர்நாடகாவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் குறைத்துவிட்டது.

அமெரிக்க நாட்டை சேர்ந்த தமது மக்கள் 30 ஆயிரம் பேரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். அமெரிக்கர்கள் ஜாக்கிரதையாக இருக்கும் படி அவர் தெரிவித்துள்ளார்.
Tags

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.