ஆண் எதற்காக வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்கிறான்?

ஆண்கள் தங்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

தாம்பத்ய உறவு, எதிர்காலத்தில் திருமண உறவில் விரிசல் ஏற்படாமை போன்ற காரணங்களே அதிகமாக முன்வைக்கப்படுகின்றன.

பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மாத விடாய் நிற்கும் வரை தான். அதன் பின்னர் அவர்களுக்கு அதில் போதுமான நாட்டம் இருக்காது. ஆனால் ஆண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சனை இல்லாததால் அவர்கள் திடகாத்திரமாக இருந்தால் 70, 80 வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும்.

25 வயது வாலிபன் 25 வயதுப் பெண்ணை அல்லது முப்பது வயதுப் பெண்ணை திருமணம் செய்தால் அப்பெண்ணுக்கு 45 வயதில் மாதவிடாய் நின்று விடும் போது அந்த ஆணுக்கு 45 அல்லது நாற்பது வயது ஆக இருக்கும். இந்த வயது தாம்பத்தியத்தை அதிகம் நாடக் கூடிய வயதாகும்.

பெண்ணால் தாம்பத்திய சுகம் கொடுக்க முடியாததால் இவன் தவறான பாதையில் செல்லும் நிலை ஏற்படும்.

பெண்கள் 15 முதல் 18 வயதுக்கு உள்ளேயும், ஆண்கள் 20 முதல் 25 வயதுக்கு உள்ளேயும் திருமணம் செய்தால் இருவருக்கும் சமகாலத்தில் தாம்பத்திய ஆசை குறைவதால் பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

இதற்கு அடுத்த காரணமாக கூறப்படுவது, சமுதாயத்தில் ஆணுக்கு பெண் இணை என்று கூறப்பட்டாலும், குடும்பத்தில் தங்கள் கை ஓங்கி இருப்பதை ஆண்கள் விரும்புவார்கள்.

வீட்டில் பிரச்சனை என்று வந்தால், அதனை சமாளிப்பதற்காக இருவரும் ஒரே மாதிரியாக சிந்திக்காமல் கொஞ்சம் மாறுபட்டு சிந்தித்தால் தான் அதற்கான தீர்வு கிடைக்கும்.

அதனால் தான் பெண்கள் தங்களை விட வயதில் மூத்த ஆண்களை திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் தற்போதைய காலம் வேறு, இருவரும் இணையான வயதில் திருமணம் செய்துகொள்வதைத்தான் விரும்புகிறார்கள்.
Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.