சுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்துள்ள குடும்பஸ்தர். சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண், சிறுவயதில் தான் படித்த பாடசாலை என கூறி சுவிஸ்லாந்திலிருந்து கடந்த இரு வருடங்களாக பல தடவைகள் குறித்த பாடசாலைக்கு பணம் அனுப்பியுள்ளார்.
அப் பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கம் உட்பட ஒரு சங்கங்களும் இல்லாத நிலையில் அதிபரிடமே குறித்த பெண் பாடசாலை அபிவிருத்தி மற்றும் அங்கு படிக்கும் கஸ்டப்பட்ட பிள்ளைகளுக்கு சைக்கிள்கள் போன்ற உதவிகள் செய்வதற்காக அதிபரிடமே பணம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறான ஒரு தொடர்பு காரணமாக பாடசாலை அதிபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு இறுதியில் அந்தரங்க நட்பாக மாறியுள்ளதாக கணவரால் சந்தேகிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணால் கிட்டத்தட்ட 25 லட்சங்கள் அளவில் அதிபருக்கு பணம் அனுப்பபட்டதாலும் இது தொடர்பாக மனைவியிடம் கேட்ட போது மனைவி அதற்கு சரியான பதில் அளிக்காத காரணத்தாலும் மனைவியுடன் கணவர் முரண்பட்டுள்ளார்.
அதன் பின்னர் இந்த மாதம் யாழ்ப்பாணம் வந்த கணவர் குறித்த பாடசாலைக்கு போய் அதிபருடன் முரன்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இது தொடர்பாக அதிபரும் பொலிசாருக்கு முறையிட்டு பின்னர் மனைவியின் வேண்டுகோளில் அதிபர் குறித்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றுள்ளார்.
இதனையடுத்தே கணவர் அதிபர் மீது கணவர் பொலிசாரிடம் தனது மனைவியிடம் பெருமளவு பணமோசடி செய்ததாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.