அட்டூழியம் நீடித்தால்…ரசிகர் படையுடன் பெங்களூர் செல்வேன்… ரஜினிகாந்த்…

சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற நிகழ்ச்சிகளை கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

இதை தீவிரமாக நான் கண்டிக்கிறேன்.கர்நாடக மக்கள் ஈவு இரக்கமின்றி ராட்சதர்களாக ஆவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…” இப்படி தொடங்கும் ரஜினியின் அறிக்கை…

“… தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம்.அப்படி ஈடுபட்டால்..அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

இச்சூழ்நிலை இப்படியே தொடருமானால்…இந்த தளபதி ரஜினிகாந்த் முன்னிலையில் ஒரு படை தமிழ்நாட்டிலிருந்து புறப்படும். கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழன் வீட்டிற்கு முன்னாலும் என்னுடைய படை வீரர்கள், நூறு நூறு பேர் பாதுகாப்பாக நிற்பார்கள்.அதற்கு என் ரசிகர்கள் என்றென்றும் தயாராக இருக்க கேட்டுக்கொள்ளுகிறேன்” என்று முடிகிறது.

எப்போ சொன்னாரு…தலீவரு ன்னு கேட்காதீங்க…இது இப்போ சொன்னதில்லை . 30.12.1992 -ல் ரஜினி கொடுத்த அறிக்கை.

ஒரு பிளாஷ் பேக்…அம்ம்புட்டுதேன்…இப்போ வாய் திறப்பாருன்னு நினைக்காதீங்க…
Tags

Top Post Ad

Below Post Ad