வீடொன்­றில் தீ அனர்த்தம்; 6 சிறு­வர்கள் உட்­பட 9 பேர் உயி­ரி­ழப்பு

அமெ­ரிக்க தென்­னஸி மாநி­லத் தில் வீடொன்றில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற தீ அனர்த்­தத்தில் சிக்கி 6 சிறு­வர்கள், 3 வயதுவந்­த­வர்கள் உட்­பட 9 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அதே­ச­மயம் இந்த சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் மீட்­கப்­பட்ட சிறுவன் ஒருவன் மருத்­து­வ­ம­னையில் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டி­ருப்­ப­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

குளி­ரூட்டி உப­க­ர­ணத்­திற்­கான மின் இணைப்பில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மா­கவே தீ ஏற்­பட்டுப் பர­வி­ய­தாக அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

இது 1920 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் அந்தப் பிராந்தியத்தில் இடம்­பெற்ற அதி­க­ள­வா­னோரைப் பலி­கொண்ட தீ அனர்த்­த­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

உயி­ரி­ழந்த சிறு­வர்கள் 3 இலி­ருந்து 17 வரை­யான வய­து­டை­ய­வர்­க­ளாவர். உயி­ரி­ழந்த வயது வந்­த­வர்­களில் அந்த சிறு­வர்­க­ளது பாட்­டி­யான எலொ­யிஸி புட்ரெல் (61 வயது), கரோல் கொலியர் (56 வயது) மற்றும் லகெயிஸா வார்ட் (27 வயது) ஆகி யோர் உள்ளடங்குகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad