யாழில் சாமத்திய வீட்டில் 16 வயது சிறுமியுடன் சல்லாபம். லண்டன் சாரங்கன் நையப்புடைப்பு.

 யாழ் வலிகாமம் பகுதியில் நடந்த பூப்புனிதநீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளது. லண்டனிலிரு்நுத வந்த 42 வயதான குடும்பஸ்தரான சாரங்கன் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று மதியம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 

தனது மனைவியின் சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு லண்டனிலிருந்து சாரங்கன் மற்றும் மனைவியும் பிள்ளைகளும் வந்து தங்கியிருந்துள்ளார்கள். இன்று மனைவியின் சகோதரியின் மகளுக்கு அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் பூப்புனிதநீராட்டு விழா நடைபெற்றுள்ளது.

 இந் நிலையில் குறித்த விழாவுக்காக அவர்களின் வீட்டுக்கு வந்திருந்த அயல் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியை மண்டபத்திற்கு தோழிகளில் ஒருவராக தன்னுடன் காரில் அழைத்துச் செல்வதாகக் கூறி குடும்பஸ்தரான சாரங்கன் நிறுத்தி வைத்திருந்துள்ளார். ஆனால் குறித்த சிறுமியை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லாது மேல் மாடியில் இருந்த அறை ஒன்றுக்கு அழைத்து அத்துமீறல் செய்துள்ளார். 

குத்து விளக்கு துாக்குவதற்காக குறித்த சிறுமியை காணாது மண்டபத்தில் தேடிய சிறுமியின் நெருங்கிய உறவினர் சிறுமியைத் தேடி வீட்டுக்குச் சென்ற போது சிறுமியுடன் குடும்பஸ்தர் அறை ஒன்றுக்குள் இருப்பதை அவதானித்து மண்டபத்தில் நின்ற சிலருக்கு தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து வீட்டுக்கு விரைந்து சென்ற அயலவர்கள் அங்கு சிறுமியுடன் தவறான நடத்தையில் ஈடுபட்டிருந்த லண்டன் சாரங்கனை நையப்புடைத்ததுடன் அடிப்பதை தடுக்க முற்பட்ட சாரங்கனின் அண்ணன் மகன் மற்றும் சிலரையும் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் உறவினர்கள் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா்கள்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் சிறுமியின் பெற்றோர் முறையிடத் தயக்கம் காட்டி வருவதாகவும் தெரியவருகின்றது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad