கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தாக்குதலாளிகள் மூவரையும் அடையாளம் கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
