கைப்பேசியினால் கழிவறையில் வாலிபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹூயூசூ நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.

மாலை நேரத்தில் மது அருந்திய அவர் போதையில் கழிவறைக்கு சென்று உள்ளார்.

கழிவறையில் வைத்து தனது கைப்பேசியில் பேசிகொண்டு இருந்து உள்ளார்.

அப்போது கைதவறி கைப்பேசி கழிவறை ஓட்டையில் விழுந்து உள்ளது.

போதையில் இருந்த அவர் தனது கைப்பேசியை எடுக்க போராடி உள்ளார்.

தனது இடது கையை கழிவறை ஓட்டையில் விட்டு கைப்பேசியை எடுக்க முயற்சித்து உள்ளார்.

அவர் போதாத நேரம் கையும் அதில் மாட்டி கொண்டது. கையை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் நடக்கவில்லை இரவு முழுவது அவர் தனது கையை எடுக்க முயற்சி செய்து உள்ளார்.

ஆனால் முடியவில்லை. இதனால் உதவி கோரி கதறி உள்ளார்.

அக்கம்பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவல் படி தீயணைக்கும் படையினர் வந்து கழிவறையை உடைத்து வாலிபரை மீட்டு உள்ளனர்.