சிசேரியனுக்கு பிறகு குழந்தையை தொட்டு தூக்கியதற்கு 2,000 பில் போட்டு அதிர வைத்த மருத்துவமனை!

தற்போது ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைகள் என்ற பெயரில் பிரசவத்திற்கு, கண்களுக்கு, இதயத்திற்கு, ஈ.என்.டி, மூட்டு என தனித்தனியாக மருத்துவமனைகள் பிரிந்தாலும் பிரிந்தது, அவர்கள் போடும் பில்லு தாறுமாறாக ஏறுகிறது. கேட்டால் நாங்க கொஞ்சம் ஸ்பெஷலாக்கும் என கூறுகின்றனர்.

ஐ.சி.யு, ஐ.சி.சி.யூ, சி.சி.யூ, ஸ்பெஷல் பெட், நார்மல் பெட், ஜெனரல் வார்ட் என மருத்துவமனைகள் 5 ஸ்டார் ஹோட்டல்கள் ரேஞ்சுக்கு மாறிவிட்டன. இப்படி வகைவகையாக நம்மிடம் பில்லு போட இவர்கள் பல விஷயங்களை செய்து நாம் பார்த்திருக்கிறோம்.

ஏன் ரமணா ஸ்டைல் மருத்துவமனைகள் கூட ஊரூருக்கு ஒன்றிரண்டு இருக்கின்றன.

ஆனால், பெற்ற குழந்தையை தாய் தொட்டு தூக்கியதற்கு எல்லாம் இரண்டாயிரம் பில் போடுவது இந்த விதத்தில் நியாயம்???

இது எந்த டாலர் நாடு என தெரியவில்லை. Imgur எனும் புகைப்படம் பகிரும் இணையத்தில், சமீபத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாய் ஒருவர் அவருக்கு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட பில்லை பகிர்ந்திருந்தார்.

அதில், சிசேரியன் முடிந்த பிறகு, தான் பெற்ற குழந்தையை தொட்டு தூக்கியதற்கு மருத்துவமனையில் $39.35 டாலர்கள் பில் போடப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், அந்த புதிய தாய், 'நான் பெற்ற குழந்தையை, தொட்டு தூக்குவதற்கு நான் $39.35 டாலர்கள் பில் கட்ட வேண்டியிருக்கிறது..' என குறிப்பிட்டு கூறியுள்ளார்.அந்த பில்லில் மருத்துவமனை ஊழியர்கள், சிசேரியன் செய்த உடனேயே, ஸ்கின் டூ சிக்கின் டச்சில் அந்த தாய் குழந்தையை தூக்கியதற்கு என கூறப்பட்டுள்ளது.
சிசேரியனோ, சுகப்பிரசவமோ, குழந்தை பிறந்தவுடன், தாய் தூக்குவது மிக சாதாரண விஷயம், மருத்துவர்களே முதலில் தாயிடம் தான் காண்பிப்பார்கள்.

இதற்கு ஏன் தனி பில் போட்டார்கள் என பலரும் அந்த பதிவின் கீழே கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த தாயின் பெயர் மற்றும் இடம் அந்த பதிவில் மறைக்கப்பட்டுள்ளது . அந்த பதிவை இதுவரை 60 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook மற்றும் Twitter-ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad