வெளிச்சத்துக்கு வரப்போகும் பெர்முடாவின் ரகசியம்!...

பெர்முடா முக்கோணத்தின் கடல் பகுதியின் ஆழத்தில் புதிரான படிக பிரமிடு அமைப்பு இருக்கிறது என ஒரு விஞ்ஞானி கூறியுள்ளார்.

மேலும், அதை ஆய்வு செய்வதன் மூலம் அந்த பகுதியில் நடக்கும் விமானம் மற்றும் கப்பல்கள் மாயமாக மறையும் மர்மத்தையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.

அவர் கூற்றுப்படி, கடலின் மேற்பரப்பில் இருந்து 2,000 அடி ஆழத்தில் அந்த ’படிக பிரமிடு’ இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த பிரமிடு இருப்பதை அந்த விஞ்ஞானி கண்டுபிடிக்கவில்லை. அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன்வைக்காததால். படிக பிரமிடு நிரூபிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

பெர்முடா பகுதி அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு மர்ம பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை டஸன் கணக்கான கப்பல்களும் ஆகாய மார்க்கமாக பறக்கும் விமானங்களும் அப்பகுதியில் தடம் தெரியாமல் மறைந்துள்ளன.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012 ல் கண்டுபிடித்தனர். அது நவீன அறிவியல் சாதனங்களின் ஆய்வில் பிடிபடாத ஒரு தன்மையுடையதாக இருக்கிறது என்பதையும் விளக்கினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடலின் அடியில் இருப்பது உயிரோட்டமான எரிமலைதான் அதுதான் கப்பல்களை சிதைத்து மூழ்கடிக்கிறது என்ற கருத்தும் வெளியானது. எரிமலையாக மட்டும் இருக்கும் நிலையில், ஆகாயத்தில் செல்லும் விமானங்களும் மறைவது எப்படி? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

மேலும், 2012 ல் அமெரிக்க மற்றும் பிரஞ்சு அறிவியலாளர்கள் குழு சென்றபோது, கடல் படுகையிலிருந்து உயர்ந்த ஒரு நிலத்தடி அமைப்பு உலுக்கி தடுமாறச் செய்துள்ளது.

ஆனால், அதற்கு எந்தவிதமான வீடியோ புகைப்பட ஆதரமும் இல்லை ஜோடிக்கப்பட்ட ஆவணப்படங்கள் மூலம் மட்டுமே அவர்களால் விளக்க முடிந்துள்ளது. இந்த சம்பவம் உலக விஞ்ஞானிகளையே உலுக்கி இருக்கிறது.

இந்நிலையில், பஹாமாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் டாக்டர் வெர்லேக் கூறியதாவது, பெர்முடா பகுதியில் பிரமிட் வடிவிலான புதிரான படிகம் உள்ளது. அதன் அகலம் 300 மீட்டர். அதன் உயரம் 200 மீட்டர்.

அது ஏற்படுத்தும் நீர்சுழற்சி மற்றும் ஈர்ப்பினால்தான் கப்பல் மற்றும் விமானங்கள் அழிகின்றன. அதிலிருந்து வெளிப்படும் சக்தி எத்தன்மையுடையது என்பது ஆராயப்பட வேண்டியது என்கிறார்.

ஆனால், அது இருப்பதற்கான சாட்சியோ ஆதாரமோ இல்லை. இது வேற்றுக்கிரகவாசிகளின் வேலையாகவும் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இந்த சம்பவங்கள் பெர்முடா மர்ம பகுதியை ஆராய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

Tags

Top Post Ad

Below Post Ad