உடல் ஊனமுற்ற பெண்ணை சக்கர நாற்காலியுடன் கடத்தி கூட்டாக கற்பழித்த கொடூரம்!

சுவீடன் நாட்டில் உடல் ஊனமுற்ற பெண்ணை சக்கர நாற்காலியுடன் கடத்தி 6 பேர் கூட்டாக கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோட்லாண்ட் தீவில் உள்ள விஸ்பி என்ற நகரில் தான் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நகரில் புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் முகாம் ஒன்று அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகில் வசித்து வந்த 30 வயதான பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கால் டாக்ஸியில் பயணம் செய்துள்ளார்.விபத்து ஒன்றில் சிக்கியதால் உடல் ஊனமுற்ற அவர் சக்கர நாற்காலியில் தான் பயணம் செய்வார். காரில் சக்கர நாற்காலியை தன்னுடன் எடுத்து சென்றுள்ளார்.பெண் பயணம் செய்த காரில் வாலிபர் ஒருவரும் பயணம் செய்துள்ளார்.
அப்போது, கழிப்பறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய அப்பெண் காரை நிறுத்துமாரு கேட்டுள்ளார்.இதனை கேட்ட அருகில் அமர்ந்திருந்த அந்த வாலிபர் ‘நான் தங்கியிருக்கும் இடம் அருகில் தான் உள்ளது. என்னுடன் வாருங்கள்’ எனக் கூறி அழைத்து சென்றுள்ளார்.பெண் சக்கர நாற்காலியில் அமர்ந்து அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அகதிகள் முகாமிற்கு சென்ற அந்த வாலிபர் ஒரு அறையை காட்டி உள்ளே செல்லுமாரு கூறியுள்ளார். நடக்க போகும் விபரீதத்தை உணராத அந்த அப்பாவி பெண் அந்த முகாமில் இருந்த கழிவறையை பயன்படுத்தியுள்ளார்.அப்போது, அங்கு மேலும் 5 பேர் வந்து சேர்ந்துள்ளனர். பெண் கழிவறையை விட்டு வெளியேறிய அதே நேரம் 6 பேரும் பெண் மீது பாய்ந்துள்ளனர்.
உடல் ஊனமுற்றதால் பெண்ணால் அலறுவதை தவிர வேறு எதிர்ப்பினை காட்ட முடியவில்லை. சில மணி நேரத்தில் 6 பேரும் அப்பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளனர்.பின்னர், அங்கிருந்து தப்பிய பெண் பொலிசாரிடம் புகார் தெரிவிக்க 6 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரும் சுவீடன் நாட்டில் புகலிடத்திற்காக காத்திருப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.