வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம்; இலங்கை சாரதி அனுமதிப் பத்திரத்திதிரமாக மாற்றுவது எப்படி

வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தினை இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்திட்கு எவ்வாரு மாற்றுவது என்பது சம்மந்தமாக பார்போம்.

இந்த பதிவு இலங்கை போக்குவரத்து தினைக்களத்தினால் 4 ஆம் திகதி மார்ச் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டக்கோவையை அடிப்படையாக கொண்டது.

வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளல்.

இதன் கீழ் இலகு ரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்கள் :
ஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம்.

விண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமதிப் பத்திரம்.

சாரதி அனுமதிப் பத்திரம் ஆங்கில மொழியில் இல்லாத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு. (English transportation)

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரிடமிருந்து 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சான்றிதழ். (Medical certificate)

வெளிநாட்டு தூதுவர் சேவைக்கு உரித்தான ஒருவராயின் அதனை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற கடிதம்.

தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட செல்லுபடியான கடவுச் சீட்டு
என்பவற்றை போக்குவரத்து தினைக்கல தலைமயகத்திலலோ அல்லது மாவட்டசெயலகம்(கச்சேரி)களில் அமைந்துள்ள போக்குவரத்து தினைக்ககல கிளைகளிலோ சமர்பித்து இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியிம்

கட்டண விபரம் (service charges) :

சாதாரண சேவை கட்டம் ரூபாய்-2500
ஒருநாள் சேவை கட்டணம் ரூபாய்-3000
ஒருநால் சேவையை தலைமயகத்தில் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியிம்.

மேலதிக விபரங்களுக்கு:
Department of motor traffic head office
No. 341, Alvitigala Mawatha, Colombo 05, Narahenpita.

Phone :
+94 11 2694331, 2694332, 2694333, 2694334, 2694335, 2694336
Email : info@motortraffic.gov.lk

Bus Route No :
103(Naarahenpita – Kotuwa), 178(Mattckkuliya – Naarahenpita – Kohuwala), 135(Kelaniya – Kohuwala)

Tags

Top Post Ad

Below Post Ad