சொந்த தாத்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பேத்தி!

அமெரிக்காவை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டார்.

இணையதளம் ஒன்றின் வாயிலாக 68 வயது முதியவருடன் இப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தின் மூலம், நாளடைவில் அந்த முதியவர் மீது இந்த பெண்ணுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டைதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், அந்த திருமணத்தின் மூலம் இப்பெண்ணுக்கு எவ்வித சந்தோஷமும் இல்லை. ஏனெனில் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு தனது குடும்பத்தாரோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாத்துள்ளார்.

அதில், மியாமில் வசித்தபோது, தனது தந்தையுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில், இவரின் கணவரின் புகைப்படம் இருந்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, இப்பெண்ணின் தாத்தா ஆவார். இதனை அறிந்து அதிர்ச்சியுற்ற அப்பெண், தான் ஏமாந்துவிட்டேன் என தனது திருமணத்தி நினைத்து வேதனையுற்றுள்ளார்.

இதுகுறித்து அந்த முதியவர் கூறியதாவது, இளம் பெண்களின் profile புகைப்படங்கள் என்னை கவர்ந்துவிடுகின்றன. அதுபோன்று தான் இவளின் புகைப்படமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

அதனால் தான் இவளுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டேன், ஒரு நாள் நாங்கள் இருவரும் உணவகம் ஒன்றில் வைத்து சந்தித்துக்கொண்டோம். ஒருவருகொருவர் பிடித்துக்கொண்டதால் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.