செத்து விடு மகனே..! கொலை செய்த தாய்..! குடும்பமே மகிழ்ந்தது..! போலீஸ் அழுதது..?

சித்தூர் கிராமத்தில் வசிக்கும் தமிழ் குடும்பம் அது. கணவனை இழந்த பெண் ரமணி. அரசாங்க விடுதி ஒன்றில் ஒப்பந்த சமையல் பணி.

மூத்த மகன் ராஜி. தவிர இரண்டு பெண் பிள்ளைகள். ராஜியை கஷ்டப் பட்டு படிக்க வைத்தாள் ரமணி. அவனுக்கு பத்தாவதுக்கு மேல் படிப்பு ஏறவில்லை.

மற்ற இரண்டு பெண்களும் பள்ளி ஒன்றில் பத்தாவது, ப்ளஸ் ஒன் படித்து வந்தனர். ராஜி ஒரு இடத்தில் வேலை பார்க்க மாட்டான். அப்படியே வேலை பார்த்தாலும் ஏதாவது சண்டை போட்டு விட்டு வீட்டில் படுத்துக் கொள்வான்.

அம்மா எவ்வளவோ போராடியும் அவன் திருந்தவில்லை. அடுத்த வாரம் ஒரு செல்போன் ரீ சார்ச் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.அங்கு பாடல்கள் ஏற்றிதருவது படங்கள் டவுன்லோடு செய்து கொடுப்பது போன்ற வேலைகளை கற்றுக் கொண்டான்.

அதில் ஆபாச சிடிகளும் விற்றான். செல் போன்களில் ஏற்றியும் கொடுத்தான். செல்போன் புதிதாக வங்கிக் கொண்டான். கை நிறைய காசு புழங்கியது. குடித்துவிட்டு வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.

மொத்தமாக அவன் சீரழிய ஆரம்பித்தான். உச்ச கட்ட கொடுமையாக தன உடன் பிறந்த தங்கைகள் தூங்கும் பொது ஆபாச படம் எடுத்தான். அதையும் பள்ளி மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து கொடுத்தான். ஏகப் பட்ட காசு ..!

அந்த ஊரில் உள்ள பெண்கள் குளிப்பது அவர்களை சீண்டுவது என இறங்கிய மகன் பற்றி ரமணிக்கு நிறைய புகார்கள் போயின. துடித்து விட்டாள்.

பள்ளி மாணவி த்லமைஆஸிரியரிடம் ராஜியின் தங்கைகளின் ஆபாச வீடியோ நிறைய உலாவுகிறது என்று படத்தையும் போட்டுக் காட்ட, பள்ளி நிர்வாகம் அதிர்ந்தது.அந்த அப்பாவி மாணவிகளை பள்ளியில் இருந்து துரத்திவிட்டார்கள்.

அம்மா, அந்த இரண்டு பிள்ளைகள் நொறுங்கிப் போயினர்..! தற்கொலைக்கு முயன்ற பிள்ளைகளை அம்மா காப்பாற்றினாள். ராஜி வீட்டை விட்டு எஸ்கேப் ஆனான்.

போலீஸும் ராஜியை தேடியது.ஒருநாள் இரவு வீட்டிற்கு வந்தான் ராஜி.யாரும் ஒன்றுமே பேசவில்லை.தனது உடைகளை எடுத்துக் கொண்டான்.நன்றாக குடித்திருந்தான். அந்த அம்மா ஒரு முடிவெடுத்தாள்.

சாப்பிட்டு போடா என்றாள். சரி என்றான்.மீண்டும் குடித்தான். அவனுக்குப் பிடித்த காரக்குழம்பு வைத்துக் கொடுத்தாள். காலையில் போ. போலீஸ் தேடுகிறது என்று கூறினாள்.

பின் புறம் மாட்டுக் குடில் ஒன்றில் தூங்கினான். நடு இரவு எழுந்தாள் அந்த தாய். போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் அருகே போய் அழுதாள்.

செத்துப் போ மகனே..!!!பெரிய பாறாங்கல்லை எடுத்து ஒரே போடாக அவன் தலையில் போட்டுக் கொன்றாள்.

காலையில் போலீசுக்கு போன, ரமணி மகனைக் கொன்று விட்டதாக கதறி அழ அந்த பரிதாப பெண் பிள்ளைகள் அண்ணன் தங்களை ஆபாசப்படம் எடுத்து நெட்டில் விட்டதையும் பள்ளி துரத்தி விட்டதையும் கதறியபடி கூற போலீஸ் கண்ணீர் விட்டது.

சரிம்மா உங்க அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போங்க என்று அனுப்பியது சித்தூர் போலீஸ். கொலை செய்த நபர்களை தேடுகிறோம் என்று அறிவித்தது ..!!

நான்கு வருடங்களாக போலீஸ் தேடிக்கொண்டே இருக்கிறது.

மூத்த பெண்ணின் படிப்புக்கு காவல் துறையினரே உதவி செய்து போலீஸ் பயிற்சிப் பள்ளியிலும் சேர்த்து விட்டனர்.

இளைய பெண் கல்லூரியில் ..! அந்த அம்மா மட்டும் குற்ற உணர்வோடு நடை பிணமாக…!!!
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.