அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

மனைவிகளால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கணவன் உயிரிழந்த பரிதாபம்!

நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு பகுதியை சேர்ந்தவர் உரோகோ ஓனோஜா. தொழிலதிபரான இவருக்கு மொத்தம் 6 மனைவிகள். சம்பவத்தன்று இரவு உக்புகு நகரில் உள்ள மதுபான பார் ஒன்றில் இரவு முழுவதும் மூக்கு முட்ட குடித்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பினார்.

அப்போது கடைசி மனைவியுடன் உடலுறவு கொள்ளும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளம் மனைவியை மட்டும் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். கடைசி மனைவியை மட்டும் தனி பெட்ரூமுக்கு உரோகோ அழைத்து செல்வதை மற்றொரு மனைவி பார்த்து விட்டார்.

அதன்பிறகு அவர் பிற மனைவிகளையும் தட்டி எழுப்பி உரோகோவும், கடைசி மனைவியும் இருந்த படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் தங்கள் கையில் இருந்த உருட்டு கட்டையால் உரோகோவை அடித்துள்ளனர். கடைசி மனைவிக்கு மட்டும் என்ன?.. அவளுடன் மட்டும் உல்லாசமாக இருப்பது ஏன்?… என்று அவரை திட்டியுள்ளனர்.

அவ்வாறு திட்டினதோடு நிறுத்திக்கொள்ளாமல் கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து 5 மனைவிகளுடன் உல்லாசமாக இருந்த பின்பு கணவர் திடீரென சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அடுத்தடுத்து மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொண்டால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு உரோகோ உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவன் இறந்ததும் கடைசி மனைவியை தவிர மற்ற 5 மனைவிகளும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பலாத்காரம், கொலை வழக்குகள் பதிந்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.