திரு­ம­ண­மான 4 நாட்­களில் கண­வனைப் பிரிந்து காத­ல­னோடு 2ஆவது திரு­மணம் செய்த காத­லி

திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து சென்­ற, பெண்­ணொ­ரு­வர் தன் காதலனுடன் 2ஆவது திருமணம் செய்து கொண்ட சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்தவர் ராமு, கூலித் தொழிலாளி. இவருடைய மகள் துர்கா ( 21), குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் வீதி­யைச் சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் கேசவன் (24) இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவ­காரம் துர்­காவின் வீட்­டுக்கு தெரிய வந்த நிலையில், பெற்றோர் மகளின் காத­லுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வேறொ­ருவரு க்கு திரு­மணம் செய்ய ஏற்­பாடு செய்­துள்ளனர்.

இந்த நிலையில் துர்காவை அவரது பெற்றோர் பிச்சனூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளை­ஞ­ருக்­கு திருமணம் செய்து வைத்துள்­ளனர். கடந்த 2ஆம் திகதி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

ஆனால் தான் காதலித்த நடராஜனை கைப்பிடிக்க முடியவில்லையே என்ற கவ­லையில் இருந்­துள்ளார். கண­வ­ரு­டன் வாழ பிடிக்­காமல் காத­லனுடன் சேரும் ஆசையில் துர்கா கடந்த 6ஆம் திகதி மாலை கணவனின் வீட்டை விட்டு ஓடியுள்­ளார்.

அக்கம்பக்கத்தில் உள்ள தோழிகளின் வீட்டுக்கு சென்றிருப்பார் என வீட்டில் உள்ளோர் நினைத்துள்­ள­னர். ஆனால் வெகுநேரமாகியும் துர்கா வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்திலும், தோழிகள் வீட்டிலும் விசாரணை செய்­துள்ளார். இருப்பி னும் துர்கா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து துர்காவின் பெற்றோர் குடியாத்தம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இதன்பேரில் பொலி­ஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் துர்காவை தேடி வந்தனர்.

இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய துர்கா, 7 ஆம் திக­தி காலையில் தனது காதலனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் பரதராமி அருகே உள்ள வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது பொலி­ஸா­ரும், உறவினர்களும் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் சென்­றுள்­ளனர். பொலி­ஸார் அவர்களை பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்­­றுள்­ள­னர். அப்போது துர்கா பொலி­ஸாரிடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன்தான் வாழ்வேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்களை பொலி­ஸார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad