1000க் கணக்கான குழந்தைகளை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்த பெண்!

போலாந்தில் பிப்ரவரி 15, 1910-ல் பிறந்தவர் இரினா சென்ட்லர். இவரது தந்தை இவருக்கு பலவற்றை கற்றுதந்தார். அதில் ஒரு பாடத்தை இவர் வாழ்நாள் முழுதும் கடைபிடித்து வந்தார். ஆம், ஏழைகளுக்கு, தேவைப்படுவோருக்கு உடஹ்வா வேண்டும் என்பதே அது.

இரினாவின் ஏழாவது வயதில் அவரது தந்தை இறந்துவிட்டார். ஆனால், தந்தையுடன் வாழ்ந்த அந்த ஏழு வருடங்கள் தான் இரினாவின் வாழ்வில் பெரும் தாக்கத்தை, தூண்டுதலை ஏற்படுத்தியது. தந்தையின் கால்தடத்தை பின்பற்றிய இரினா. தந்தையை (மருத்துவர்) மருத்துவ துறையில் (நர்ஸாக) கால் பதித்தார்.

பிறகு சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் இரினா. சமூக நல்வாழ்வு அமைப்பு மூலம் உணவு, உடைகள் அளித்து உதவி வந்தார்…

இரண்டாம் உலகப் போர்!

இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள் மாற்றம் நாசி மத்தியில் பெரும் பகை இருந்தது. ஏறத்தாழ நான்கு லட்சத்திற்கும் மேலான யூதர்களை நாசிகள் கெட்டோ எனும் சிறிய பகுதியில் சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.
அந்த சிறிய பகுதியில் அளவுக்கு அதிகமான மக்களை அடைத்து வைக்கவே அங்கு பசி, நிலையின்மை, நோய் தோற்று போன்றவை அதிகரிக்க ஆரம்பித்தது.

யூதர்களுக்கு உதவி!

அப்போது ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்திருந்த போலாந்து பகுதியில் யூதர்களுக்கு உதவி செய்ய புறப்பட்டார் இரினா. அங்கு தான் உயிரை பணயம் வைத்து தான் உதவி செய்ய வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தார் இரினா.
தனது உடன் உதவி செய்ய வந்தவர்களுடன் சேர்ந்து கெட்டோவில் இருந்து குழந்தைகளை யூத குழந்தைகளை வெளியேற்ற ரகசியமாக உதவினார்.

யூத குடும்பங்கள்!

இரினா பல யூதர்களை, யூத குடும்பங்களை நேரடியாக சென்று பார்த்து குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க அணுகினார். ஆனால், பல தாய்மார்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் யாரோ பெயர் தெரியாத ஒருவருடன் குழந்தைகளை அனுப்ப மறுத்தனர்.

மாற்று வழி!

நாசியின் கண்காணிப்பு கெட்டோ பகுதியில் கடுமையாகவும், விரிவாகவும் இருந்தது. இரினா ஒரு நல்ல மாற்று வழியை தெரிந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

சவப்பெட்டி!

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை கெட்டோவில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி போன்றவற்றில் அடைத்து மீட்க முயன்றார்.

2500 குழந்தைகள்!

இந்த வகையில் மட்டும் இரினாவால் காப்பாற்றப்பட்டனர். ஒருநாள் இந்த வகையில் இரினா யூத குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர வைக்கிறார் என்பதை நாசி படையினர் அறிந்து அவரை கைது செய்தனர்.
சிறையில் அடைத்து அவரை சித்திரைவதை செய்து, கைகளை உடைத்து கொடுமைகள் செய்தனர். இவ்வளவு கொடுமைகள் நடந்தும், அந்த குழந்தைகள் பற்றி ஒரு தகவலும் கொடுக்காமல் அவர்களை காப்பாற்றினார் இரினா.

போலி அடையாளம்!

நாசி படையில் ஒரு வீரருக்கு லஞ்சம் கொடுத்து இரினாவை சிறையில் இருந்த தப்ப வைத்தனர். அன்றிலிருந்து கடைசி வரை இரினா போலியான அடையாளத்தில் வாழ்ந்து வந்தார்.

போர் முடிவு பெற்றவுடன் குழந்தைகள் பற்றிய அணைத்து தகவல்களையும் கொடுத்தார் இரினா. இதன் பிறகு இவர் திருமணம் செய்துக் கொண்டு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்.

மரணம்!

தனது 98வது வயதில் மரணம் அடைந்தார் இரினா. 1997-ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த வருடத்திற்கான நோபர் பரிசு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad