15 பெண்களை வசியப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இந்த மன்மதனை தெரியுமா ?

இத்தாலியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பெண்களை வசியப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக அவரது முன்னாள் காதலிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

 15 பெண்களை வசியப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பாதிரியார் மீது புகார்  இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியத்தில் உள்ள பதுவா நகரைச் சேர்ந்த ஆண்ட்ரியா கண்டின் (வயது 48) என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக பொறுப்பு வகித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பாதிரியார் மீது, அவரது முன்னாள் காதலிகள் மூன்று பேர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர். அதில், பாதிரியார் ரகசியமாக விபச்சார தொழில் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும்,


அவருக்கு நன்கு பழக்கமான 15 இளம்பெண்களை அத்தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினர். இக்குற்றச்சாட்டை தொடர்ந்து பாதிரியாரின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, வீட்டிற்குள் எடுக்கப்பட்ட ஆபாசப்படக் காட்சிகள் அடங்கிய வீடியோ சி.டி.கள் மற்றும் ஆபாச புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து 49 வயதான பெண் ஒருவர் கூறுகையில், பாதிரியாருடன் எனக்கு ரகசிய தொடர்பு இருந்தது. ஆனால், அதற்கு பிறகு அவருக்கு எண்ணற்ற பெண்களுடன் தொடர்புள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.


 பாதிரியார் மீதான குற்றச்சாட்டு குறித்து நகர மேயரான பாலோ டொனின் என்பவர் கூறுகையில் பாதிரியார் செய்த குற்றங்களை மறைக்க பெரும் சதி நிகழ்ந்து வருகிறது. ஆனால், இவ்விவகாரம் தேசிய அளவில் பெரிதாகிவிட்டதால் அவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ளார். பாதிரியார் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Top Post Ad

Below Post Ad