உன் தங்கையை எனக்கு கொடு!.. என் மகளை நீ எடுத்துக்கோ!.. அசிங்கத்தின் மறு உருவம்!..

பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் வாசிம் அகமது (36) என்ற நபர். இவர் தற்போது செய்திருக்கும் ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பருவத்துக்கு வந்த தன் மகளை அண்டை வீட்டில் வசிக்கும் ரம்ஜான் என்னும் நபரிடம் நிரந்தரமாக கொடுத்த வாசிம், அதற்கு ஈடாக ரம்ஜானின் சகோதரி சைமாவை இரண்டாவது திருமணம் செய்ய அவரிடம் இருந்து நிரந்தரமாக வாங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய வாசிம், எங்கள் வீட்டு பெண்ணை மற்றவர்களுடன் மாற்றி கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. இதில் யாரும் தலையிட முடியாது என கூறியுள்ளார்.16 வயதுகுட்பட்ட பெண்ணை திருமணம் செய்வது அந்நாட்டில் சட்டபடி குற்றம் என்பதால் வாசிமை போலீஸார் கைது செய்தனர். ஆனால் தான் திருமணம் செய்ய போகும் சைமாவிற்கு 16 வயது ஆகிவிட்டது என அவர் நிரூபித்ததால் , அவர் விடுதலை செய்யப்பட்டார்.

வாசிம் அகமது மட்டும் இவ்வாறு செய்யவில்லை, பாகிஸ்தான் நாட்டில் பழமைவாதத்தை பின்பற்றும் பல கிராமங்களில், இது போன்ற விஷயங்களை பலர் இன்னும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad