பேஸ்புக்கில் பணத்தை காட்டி மாட்டிக்கொண்ட 20 வாலிபன்.

சிலர் எந்த புகைப்படங்களை பேஸ் புக்கில் போடுவது என்று தெரியாமல் போட்டு பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் தன்னிடம் உள்ள பணத்தை காட்டிக் கொண்டு செல்பி எடுத்து. அதனை அப்படியே பேஸ் புக்கில் போட்ட மொகமெட் என்னும் 20 வயது இளைஞர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கிக்கொண்டார்.

குறித்த இளைஞர் தனது புகைப்படத்தை பேஸ் புக்கில் போட்ட பிற்பாடு. அவர் கஞ்சா கடத்துவதாகவும். இதனூடாகவே அவர் பெரும் பணம் சம்பாதிப்பதாகவும் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. முதலில் பொலிசார் அவரைப் பற்றி ரகசிய விசாரணை செய்ததில் அவர் வேலை எதுவும் செய்வதில்லை என்பது தெரியவர. அவ்வாறாயின் கையில் எவ்வாறு இவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனை அடுத்து பொலிசார் மேலும் துருவி விசாரிக்கவே, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. பொலிசார் அலேக்காக சென்று அவரை கைதுசெய்து வீட்டை சோதித்த வேளை. பல ஆயிரம் பவுண்டுகள் கைப்பற்றப்பட்டதோடு, போதைப் பொருள்களும் அங்கே இருந்துள்ளது. ஏன் இந்த வேலை காசை உழைத்தோமா எங்கேயாவது சென்றோமா என்று இருக்காமல் பேஸ் புக்கில் போஸ்ட் போட்டு தற்போது மாமியார் வீட்டில் உள்ளார் இவர்.
Tags

Top Post Ad

Below Post Ad