காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மாணவியை கற்பழித்த இளைஞர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ. நாகூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்அங்குள்ள நர்சிங் கல்லூரியில் 2- ஆண்டு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கார்த்திக் (18). நர்சிங் மாணவிக்கும் கார்த்திக்கிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்கள் பல இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

அப்படி சென்றபோது எல்லையை மீறி இருவரும் உல்லாசம் இருந்தனர்.  உல்லாச காட்சிகளை மாணவிக்கு தெரியாமல் கார்த்திக் தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்டார். பின்னர் உல்லாசம் அனுபவித்த வீடியோ பதிவுகளை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார் அந்த காட்சியை பார்த்த நெகமத்தை சேர்ந்த வெள்ளச்சாமி என்பவரது மகன் கார்த்திக் (23) ஆபாச காட்சியை மாணவியிடம் காண்பித்து உல்லாசத்துக்கு வரவேண்டும் இல்லை என்றால் இந்த காட்சிகளை பரப்பி விடுவேன் என்று மிரட்டினார்.

அதிர்ச்சியில் உறைந்த மாணவி அவருக்கு பணிந்தார். அடுத்தபடியாக பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த சபரீஸ்வரன் (20) என்பவர் அதே வீடியோ காட்சியை காண்பித்து மாணவியை கற்பழித்தார்.  இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். 
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்