பெண் ஒருவரை இளைஞர் குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சியை பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்த அதிர்ச்சி சம்பவம் சுவிடனில் பதிவாகியுள்ளது. சுவிடனின் தலை நகரான ஸ்டோக்ஹோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உப்சாலா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது,
பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் மூன்று இளைஞர்கள், ஒரு பெண்ணை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் சில மணி நேரங்கள் நீடித்த நிலையில் குறித்த சம்பவ நிகழ்ந்த பகுதியை பொலிஸார் இணங்கண்டுள்ளனர்.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கடந்த வருடத்தில், பேஸ்புக் நேரடி ஒளிபரப்பு மூலம், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தமை மற்றும் அமெரிக்காவில் வெள்ளை இன விசேட தேவையுடையவரை நான்கு கறுப்பினத்தவர்கள் கொடுமை படுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் மூன்று இளைஞர்கள், ஒரு பெண்ணை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் சில மணி நேரங்கள் நீடித்த நிலையில் குறித்த சம்பவ நிகழ்ந்த பகுதியை பொலிஸார் இணங்கண்டுள்ளனர்.