கொல்கத்தாவில் பள்ளி மாணவன் ஒருவன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்ட பின் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதினோராம் வகுப்புப் படித்து வரும் சம்ப்ரித் பானர்ஜி, கடந்த புதன்கிழமை இரவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்டு, வீட்டில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மறுநாள் சம்ப்ரித்தை எழுப்ப வந்தபோது, அவர் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.
நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் கவலையில் இருந்த சம்ப்ரித் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சம்ப்ரித்தின் பெற்றோர்கள் அவரது படிப்பை கருத்தில் கொண்டு எப்போதும் கண்டிப்புடன் நடந்துக் கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.