45-வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க துணை அதிபராக மைக்கெல் பென்ஸ் பதவியேற்றார். வாஷிங்டன், கேபிடல் ஹில்லில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல் ஆகியோரும் ஹிலாரி கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.