127 வன்முறை சம்பவங்கள் - 17 குழுக்கள் ! வடக்கை ஆட்டிப்படைக்கும் ஆயுத குழுக்கள்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் 17 ஆயுத குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற 127 வன்முறை சம்பவங்களுடன் இந்த குழுக்கள் தொடர்புப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுத குழுக்களில் ஆவா மற்றும் டினோ ஆகியன முக்கியமானவை என பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாள், கத்தி போன்ற கூறிய ஆயுதங்களை கொண்டுள்ள இந்த குழுவினர் கூலிப்படையாக செயற்படுவதாகவும், பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை உடைத்து சேதப்படுத்துவதுடன், கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad