இராணுவத்தால் தோண்டப்பட்ட குழியில் பரிதாப மரணம் அடைந்த தமிழ் சிறுவன்.

கடந்த 4ஆம் திகதி காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் வீட்டுத்திட்டம் பகுதியிலிருந்து காணாமல் போயிருந்த கஜேந்திரகுமார் கஜீவன் (வயது-10) என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

நல்லிணக்கபுரம் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டபோதும், இராணுவத்தினரால் பாவிக்கப்பட்ட வாகன திருத்தும் நிலையம் அகற்றப்படாமல், கழிவு நீர் தேங்குவதற்காக கட்டப்பட்ட சுமார் 7 அடி ஆழமான குழியில் வீழ்ந்து இச் சிறுவன் மரணித்துள்ளான். குறித்த சிறுவனின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தால் தோண்டப்பட்ட குறித்த குழியை முடித்தருமாறு ஏற்கனவே மக்கள் கோரிக்கை விடுத்திருந்தபோதும் அதனை மூடாததால் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இப்பிரதேச மக்கள், இப்பிரதேசத்தில் சுமார் 35 சிறுவர்கள் வாழ்வதாகவும் அவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு குறித்த குழியை மூடித் தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இல்லாவிட்டால் குறித்த வீட்டுத்திட்டத்தை விட்டு வெளியேறுவோம் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த குழியை மூடுவதற்கு பிரதேச செயலகம் முன்வந்திருந்த போதிலும், அதனை தாமே மூடித்தருவதாக ராணுவத்தினர் பொறுப்யேற்றிருந்ததாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Tags

Top Post Ad

Below Post Ad