சிரியாவில் ஒரு முள்ளிவாய்க்கால்: 13,000 பேர் ரகசியமாக கொல்லப்பட்டுள்ளார்கள்

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் யுத்தத்தினால் இதுவரை சுமார் 13000 பேர் வரை ரகசியமான முறையில் தூக்கிலிடப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.


 சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. குறித்த போரானது அந்நாட்டு ஜனாதிபதியிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதியிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களை எதிர்த்து, ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் சார்பான சிரிய இராணுவத்தினருடன் இணைந்து ரஷ்யா,துருக்கி மற்றும் ஈரானிய படைகளும்,

ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்காவும், சிரியாவிற்குள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜனாதிபதி எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களை அந்நாட்டு அரச படைகள் கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட, இதுவரையிலும் சுமார் 13000 பேர், சிரியாவின் மத்திய சிறையான, சத்னயா சிறை அமைந்துள்ள பகுதியில் ரகசியமாக தூக்கிலிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. அவ்வாறு தூக்கிலிடப்படுபவர்களின் உடல்கள், டமாஸ்கசில் உள்ள டிஸின் இராணுவ தலைமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,


அங்கு மொத்தமாக புதைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதுவரை சுமார் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பேர்வரை தூக்கிலிடப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு வாரத்துக்கு 20 முதல் 50 பேர் வரை தூக்கிலிடப்படுவார்கள் என, பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர் சாட்சியம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad