சென்னை: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற மிருகம்

தமிழ்நாட்டில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியின் உடல் மாங்காடு பகுதிக்கு அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட ஜஸ்வந்த என்ற 22 வயது பொறியாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஹாசினி கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்து ஹாசினியை தேடி வந்தனர். இந்நிலையில், குடியிருப்பில் விசாரணை மேற்கொண்டு பொலிசார், ஜஸ்வந்த்திடம் விசாரணை மேற்கொள்ள அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜஸ்வந்த் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து தலையணையால் முகத்தில் அழுத்தி கொன்று, உடலை மாங்காடு அருகே பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து மாங்காடு பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.

குடியிருப்பில் வைத்து ஜஸ்வந்த்தை பொலிசார் கைது செய்தபோது அங்கிருந்து மக்கள் அவரை கடுமையாக தாக்கினர்.

ஜஸ்வந்த்தை மக்களிடமிருந்து மீட்ட பொலிசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad