புதை குழியில் சிக்கிய நபரின் கடைசி நொடிகள்: காப்பாற்றப் பட்டாரா இல்லையா

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் மண் அள்ளும் இயந்திரத்தோடு வேலைசெய்துகொண்டு இருந்த உளவர் ஒருவர், திடீரென புதை குழியில் சிக்கியுள்ளார். அவர் சற்றும் எதிர்பாராமல் அங்கே இருந்த புதை குழி பக்கமாக அவரது இயந்திரவாகனம் சரிந்துள்ளது. இன் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மண்ணில் புதைந்துகொண்டு இருந்துள்ளார். ஆனால் அவ்வழியால் எவரும் வரவில்லை.

சுமார் 2 மணி நேரமாக அவர் போராடிக்கொண்டு இருந்துள்ளார். ஆனால் அதேவேளை மெல்ல மெல்ல புதைந்துகொண்டு இருந்துள்ளார். இறுதியாக வாய் வரை அவர் புதைந்து விட்டார். இன் நிலையில் மூக்கால் சுவாசித்துக்கொண்டு, அவர் திணறியவேளை. அவ்வழியே வந்த நபர் ஒருவர் இதனைக் கண்டு உடனடியாக தீ அணைக்கும் படைக்கு அறிவித்துள்ளார். அவர்கள் வந்து உடனே இவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.